Tamil Nadu Assembly, all the members extended their birthday wishes to Chief Minister Vijay google
தமிழ்நாடு

TN Assembly : "முதல்வர் விஜய் பிறந்தநாள், மேஜையை தட்டி வாழ்த்திய MLAக்கள்’’ : ஆளுநர் உரை மீது விவாதம்...!

தமிழக சட்டசபையில் முதல்வர் விஜயின் பிறந்தநாளை ஒட்டி, அவருக்கு உறுப்பினர்கள் அனைவரும் வாழ்த்து தெரிவித்தனர்.

Kannan

சட்டசபை கூட்டத்தொடர்

தவெக அரசு பொறுப்பேற்றதும் கடந்த வாரம் தமிழக சட்டசபை கூட்டம் முதல்முறையாக கூடியது. புதிய சட்டசபையின் முதல் கூட்டம் என்பதால், ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் உரை நிகழ்த்தினார்.

2023ம் ஆண்டுக்கு பிறகு ஆளுநரின் முழு உரை பேரவையில் இடம் பெற்றது. தவெக அரசின் செயல் திட்டங்கள் குறித்து ஆளுநர் விவரித்தார்.

மேகதாது அணை - தனித் தீர்மானம்

அதைத்தொடர்ந்து 19ம் தேதி பேரவையில் மேகதாதுவில் அணைக்கட்டும் கர்நாடக அரசுக்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாகவும், அணைக்கட்ட கர்நாடகா அரசுக்கு அனுமதி வழங்கக் கூடாது என ஒன்றிய அரசை வலியுறுத்தியும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது

முதல்வர் பிறந்தநாள் - உறுப்பினர்கள் வாழ்த்து

இதையடுத்து ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் இன்று தொடங்கியது. முதல்வராக பொறுப்பேற்ற பிறகு, விஜய் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

அவைக்கு வந்த அவருக்கு உறுப்பினர்கள் அனைவரும் வாழ்த்து தெரிவிதனர். ஆளுங்கட்சி உறுப்பினர்கள் மேஜையை தட்டி, தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

சபாநாயகர் வாழ்த்து.!

தமிழக அரசியலின் மறுமலர்ச்சி நாயகனாக, திரை,, அரசியல் ஆகிய இரண்டு மக்களின் நம்பிக்கை நட்சத்திரமாக நேர்கொண்ட பார்வையுடன் ஆட்சி செய்பவர். தூய்மையான ஆட்சிக்கு சொந்தக்காரராக விளங்கி வரும் முதலமைச்சர் பல்லாண்டு வாழ்ந்து பல பல சாதனைகளை படைக்க வாழ்த்துகிறேன்.

திரைத்துறை உச்சத்தில் இருந்தபோது தன்னை ஆதரித்த கோடிக்கணக்கான மக்களுக்காக புகழையும் வசதிகளையும் விட்டு மக்களுக்காக அர்ப்பணித்தவர். பிறரின் அனுபவங்களை அறிந்து கற்றுக் கொள்வதில் முதலமைச்சர் வல்லவர். மக்களின் தேவைகளை துல்லியமாக அறிந்தவர். ஆழமாக சிந்தித்து முடிவெடுக்கும் திறமை மிக்கவர் என்று சபாநாயகர் வாழ்த்து தெரிவித்தார்.

இரண்டு நாட்கள் விவாதம்

சட்டப்பேரவை கட்சித் தலைவர்கள் உட்பட எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேச உள்ளார். சட்டமன்ற கட்சி தலைவர்கள் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோரின் கேள்விகளுக்கு முதலமைச்சர் விஜய் நாளை பதில் உரை வழங்குகிறார்.

========================