Tamil Nadu Assembly Business Advisory Committee meeting to be held tomorrow; Speaker makes the announcement.  google
தமிழ்நாடு

நாளை கூடுகிறது "தமிழக சட்டப்பேரவை அலுவல் ஆய்வுக்குழுக் கூட்டம்" : 17 பேர் நியமனம், பேரவை தலைவர் அறிவிப்பு..!

தமிழக சட்டப்பேரவை அலுவல் ஆய்வுக்குழுக் கூட்டத்தில்.பங்கேற்பவர்கள் விவரத்தையும் பேரவைத் தலைவர் வெளியிட்டுள்ளார்.

Rohini

கூடுகிறது சட்டமன்ற அலுவல் கூட்டம்

தமிழக சட்டப்பேரவை அலுவல் ஆய்வுக்குழுக் கூட்டம் நாளை நடைப்பெறுவதாக சட்டப்பேரவை தலைவர் ஜே சி டி பிரபாகர் அறிவித்துள்ளார்

அதன்படி அலுவல் ஆய்வுக்குழுக் கூட்டத்தில் பங்கேற்பவர்கள் விவரமானது வெளியிடப்பட்டுள்ளது

தலைவர்:

1. ஜே.சி.டி.பிரபாகர், பேரவைத் தலைவர்.

உறுப்பினர்கள்:

2. ச. ஜோசப் விஜய், முதலமைச்சர்.

3. என். ஆனந்த், ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத் துறை அமைச்சர்.

4. கே.ஏ. செங்கோட்டையன், வருவாய் & பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் மற்றும் பேரவை முன்னவர்.

5. ரா. நிர்மல் குமார், எரிசக்தி மற்றும் சட்டத் துறை அமைச்சர்.

6. செ. ராஜேஷ் குமார், சுற்றுலாத் துறை அமைச்சர்.

7. வன்னி அரசு, சமூக நீதித் துறை அமைச்சர்.

8. ரா. சபரிநாதன், அரசுத் தலைமைக் கொறடா

9. உதயநிதி ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர்.

10. ஏ.வ. வேலு, திமுக

11. சிவசங்கர், திமுக

12. எடப்பாடி பழனிசாமி, அதிமுக

13. ஓ.எஸ். மணியன், அதிமுக

14. முனைவர் சௌமியா அன்புமணி, பாமக

15. ஆர். செல்லசுவாமி, சிபிஎம்

16. இராமச்சந்திரன், சிபிஐ

17. எஸ்எஸ்பி சையது பாரூக் பாஷா, ஐயுஎம்எல்

ஆகியோர் இடம்பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆளுநர் உரையுடன் தொடங்கும் சட்டபேரவை கூட்டத்தொடர்

அதன்படி சட்டப்பேரவி கூட்டித்தொடரானது காலை 10 மணிக்கு ஆளுநர் உரையுடன் கூட்டத்தொடர் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆளுநர் உரை மீதான விவாதம் எத்தனை நாள்கள் நடைபெறும் என்பது குறித்து நாளை பிற்பகல் நடைபெறும் அலுவல் ஆய்வுக்குழுக் கூட்டத்தில் விவாதித்து முடிவெடுக்கப்படும் என்றும் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

=======================