In the Tamil Nadu Assembly elections, the DMK and the AIADMK are contesting directly in 121 constituencies:  source : google
தமிழ்நாடு

DMK vs ADMK : தமிழக சட்டமன்ற தேர்தல் 2026 : 121 தொகுதியில் நேரடியாக மோதும் திமுக - அதிமுக !

தமிழக சட்டமன்ற தேர்தலில் 121 தொகுதிகளில் திமுகவும் அதிமுகவும் நேரடியாக போட்டியிடுகின்றன.

S Kavitha

In the Tamil Nadu Assembly elections, the DMK and the AIADMK are contesting directly in 121 constituencies:

தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த மாதம் 23 ஆம் தேதி நடைபெற உள்ளது. அனைத்து கட்சிகளும் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு உள்ளன.

இந்நிலையில் திமுக தலைவர் ஸ்டாலின் போட்டியிடும் கொளத்தூர், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி போட்டியிடும் எடப்பாடி தொகுதி,

உதயநிதி ஸ்டாலின் போட்டியிடும் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி உள்ளிட்ட 121 தொகுதிகளில் திமுகவும் அதிமுகவும் நேரடியாக போட்டியிடுகின்றன.

திமுகவும் அதிமுகவும் நேரடியாக போட்டியிடும் தொகுதிகளின் பட்டியல் :

கன்னியாகுமரி, பாளையங்கோட்டை, திருநெல்வேலி, ஆலங்குளம், தென்காசி, கோவில்பட்டி, தூத்துக்குடி, விளாத்திகுளம், முதுகுளத்தூர், பரமக்குடி (தனி), அருப்புக்கோட்டை.

கம்பம், போடி, ஆண்டிப்பட்டி, திருமங்கலம், திருப்பரங்குன்றம், மதுரை மேற்கு, மதுரை வடக்கு, சோழவந்தான் (தனி), மதுரை கிழக்கு, திருமயம், விராலிமலை.

பேராவூரணி, பட்டுக்கோட்டை, ஒரத்தநாடு, திருவிடைமருதூர், வேதாரண்யம், பூம்புகார், புவனகிரி, குறிஞ்சிப்பாடி, நெய்வேலி, திட்டக்குடி, அரியலூர், பெரம்பலூர் (தனி), முசிறி, லால்குடி.

திருவெறும்பூர், திருச்சி கிழக்கு, ஸ்ரீரங்கம், குளித்தலை, ஆலங்குடி, கிருஷ்ணராயபுரம் (தனி), கரூர், அரவக்குறிச்சி, வேடசந்தூர், திண்டுக்கல், நிலக்கோட்டை (தனி), ஆத்தூர்.

உடுமலைப்பேட்டை, வால்பாறை (தனி), கிணத்துக்கடவு, கோவை தெற்கு, தொண்டாமுத்தூர், சூலூர், பல்லடம்,மேட்டுப்பாளையம், குன்னூர், கூடலூர் (தனி),கோபிச்செட்டிபாளையம், அந்தியூர்.

பவானி, பெருந்துறை, காங்கயம், தாராபுரம் (தனி), குமாரபாளையம், பரமத்திவேலூர், நாமக்கல், சேந்தமங்கலம் (தனி), வீரபாண்டி, சேலம் தெற்கு, சங்ககிரி, எடப்பாடி.

மேட்டூர், ஏற்காடு (தனி), கெங்கவல்லி (தனி), சங்கராபுரம், உளுந்தூர்பேட்டை, திருக்கோவிலூர், விழுப்புரம், வானூர் (தனி),வந்தவாசி (தனி), செய்யாறு, ஆரணி, கலசப்பாக்கம், கீழ்பென்னாத்தூர்.

செங்கம், அரூர் (தனி), பாப்பிரெட்டிப்பட்டி, பாலக்கோடு, ஓசூர், வேப்பனஹள்ளி, பர்கூர், ஜோலார்பேட்டை, ஆம்பூர், அணைக்கட்டு,வேலூர், ஆற்காடு,காட்பாடி, காஞ்சிபுரம், மதுராந்தகம் (தனி), செங்கல்பட்டு.

தாம்பரம்,ராயபுரம், மாதவரம், மதுரவாயல், திருவள்ளூர், கும்மிடிப்பூண்டி, ஆயிரம்விளக்கு, அண்ணா நகர், சேப்பாக்கம்-திருவல்லிகேணி, துறைமுகம், விருகம்பாக்கம்.

தியாகராய நகர், வேளச்சேரி, சோழிங்கநல்லூர், ஆர்.கே.நகர், வில்லிவாக்கம், ஆலந்தூர், கொளத்தூர், திரு,வி.க.நகர், எழும்பூர் தனித் தொகுதி என திமுகவும் அதிமுகவும் வரும் சட்டமன்ற தேர்தலில் 121 தொகுதிகளில் நேரடியாக மோதுகின்றனர்.