Tamil Nadu BJP election manifesto has promised that every family will be provided with Rs 10,000  google
தமிழ்நாடு

"தாமரை வாக்குறுதி 2026" : ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.10,000, ஆண்டுக்கு 3 சிலிண்டர், திருப்பரங்குன்றத்தில் தீபம்!

ஒவ்வொரு குடும்பத்திற்கும் மாதம் 10,000, ஆண்டுக்கு மூன்று சிலிண்டர் இலவசமாக வழங்கப்படும் என்று, தமிழக பாஜக தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது.

Kannan

சட்டமன்ற தேர்தல் - கட்சிகளின் வாக்குறுதிகள்

தமிழக சட்டமன்றத்திற்கு ஒரே கட்டமாக 23ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கும் நிலையில், திமுக, அதிமுக, தவெக, நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகள் தாங்கள் ஆட்சிக்கு வந்தால் நிறைவேற்றப்படும் வாக்குறுதிகள் அடங்கிய தேர்தல் அறிக்கைகளை வெளியிட்டன.

பாஜக தேர்தல் அறிக்கை வெளியீடு

அந்த வகையில், தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான பாஜகவின் தேர்தல் அறிக்கையை மத்திய அமைச்சர் ெஜே.பி.நட்டா சென்னையில் வெளியிட்டார்.

அமைச்சர் பியூஷ் கோயல், பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், அண்ணாமலை, தமிழிசை உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தாமரை வாக்குறுதி 2026

”புதிய யுகம் படைக்கும் தாமரை வாக்குறுதி 2026" என்ற தலைப்பில் பாஜகவின் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

”பாஜக தேர்தல் வாக்குறுதிகள்” :

* தே.ஜ.கூட்டணி ஆட்சிக்கு வந்தால் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.2,000

* ஆண்டுக்கு 3 சமையல் எரிவாயு சிலிண்டர்கள். தமிழ்ப் புத்தாண்டு, பொங்கல், தீபாவளி பண்டிகைகளுக்கு இவை வழங்கப்படும்.

* ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஒரு முறை ரூ.10,000 வழங்கப்படும்

* திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றப்படும்

* தைப்பூசம் திருநாள் மாநில விழாவாக அறிவித்து கொண்டாடப்படும் பாஜக தேர்தல் வாக்குறுதி

* பெண்கள் இருசக்கர வாகனம் வாங்கரூ.25,000 மானியம் வழங்கப்படும்

* முதல் தலைமுறை இளநிலை, முதுநிலை பட்டப்படிப்பு மாணவர்களுக்கு ரூ.10 லட்சம் வரை கல்விக் கடன்

* மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணியை விரைவுப்படுத்தி விரைந்து முடிப்போம்

* பெண்களுக்கு எதிரான குற்றங்களை ஒழிக்கப் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை

* இதற்காக தடையற்ற 'ஜீரோ-எப்ஐஆர்' (Zero-FIR) பதிவுமுறை

* பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சாட்சியாளருக்கான பாதுகாப்பு

* பாலியல், போக்ஸோ குற்றங்கள் உள்ளிட்ட கொடூரமான வழக்குகளை விசாரிக்க சிறப்பு விரைவு நீதிமன்றங்கள்

* பேருந்துகள், பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் 100% கண்காணிப்பு கேமரா (CCTV) வசதி

* 'நிர்பயா' நிதியை முழுமையாகப் பயன்படுத்தப்படும்

* பெண்கள் தலைமையிலான கூட்டுறவு சங்கங்கள், சுயஉதவிக் குழுக்கள், குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் உற்பத்தி அலகுகளை அமைக்க ₹50 லட்சம் வரை வட்டி இல்லாக் கடன்

* அரசின் கொள்முதலில் பெண்களுக்குச் சொந்தமான நிறுவனங்களுக்கு 20% இட ஒதுக்கீடு (Procurement Quota) கட்டாயம்

==========

.