Tamil Nadu BJP leader Nainar Nagendran has accused the DMK of using social justice only for stage drama nainar nagendran twitter
தமிழ்நாடு

”மேடை நாடகத்திற்கு மட்டுமே சமூகநீதி” : திமுகவை சாடிய நயினார்

மேடை நாடகத்திற்காக மட்டுமே சமூக நீதியை திமுக பயன்படுத்தி வருவதாக, தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம்சாட்டி உள்ளார்.

Kannan

கோவிலில் அன்னதானம்

Tamil Nadu BJP leader Nainar Nagendran has accused the DMK of using social justice only for stage drama : அறிஞர் அண்ணாவின் நினைவு நாளான நேற்று, நெல்லையப்பர் கோவிலில் அன்னதானம் நடைபெற்றது. இதில் கலந்து கொள்ள வந்த நரிக்குறவரின குழந்தைகளை உள்ளே நுழைய அனுமதிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

நரிக்குறவரின குழந்தைகள்

இது சர்ச்சையான நிலையில், அதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், “ திருநெல்வேலி நெல்லையப்பர் திருக்கோவிலில், அறிஞர் அண்ணாவின் நினைவு நாளை முன்னிட்டு நடத்தப்பட்ட அன்னதானத்திற்கு வந்த நரிக்குறவரின குழந்தைகளைத் திருக்கோவில் உள்ளேயே முதலில் அனுமதிக்காததோடு, பின் உணவும் வழங்காமல் பசியோடு அனுப்பியிருக்கிறது திமுக கும்பல்!

பசியோடு விரட்டப்பட்ட குழந்தைகள்

வயிற்றுப் பசிக்காக வந்த குழந்தைகளைக் கோவில் உள்ளே வந்தால் அடித்துவிடுவதாக மிரட்டுவது தான் திமுகவின் பகுத்தறிவா? ஏழை எளிய பழங்குடியினக் குழந்தைகளைக் கோவிலுக்குள் வரவிடாமல் தடுப்பதும், அன்னதான உணவை சாப்பிட விடாமல் தடுப்பதும் தான் திமுகவின் சமூக நீதியா?

எங்கும் சமநிலை இருக்க வேண்டும்

சட்டப்பேரவையில் சமநிலையை உறுதி செய்வதில்லை, சமூகத்திலும் சமநிலையை உறுதி செய்வதில்லை, இது தான் சபாநாயகர் பதவியில் இருக்கும் ஒரு தலைவர் செய்யும் செயலா? வெட்கக்கேடு!

மேடைகளில் சமூக காவலர்கள் வேடம்

பசுந்தோல் போர்த்திய புலியைப் போல சமூகநீதி காவலர்களாய் மேடையெங்கும் வேடமிடுவது, பின் சமூகத்தில் பின்தங்கிய ஏழை எளிய மக்களைத் தூக்கி வீசியெறிவது என நாடகமாடும் ஆதிக்க மனநிலை.

சமூகநீதி - திமுக பேசக்கூடாது

எனவே, அறிவாலயம் கும்பல் இனி தப்பித் தவறி கூட சமூகநீதி எனும் வார்த்தையை உரைக்கக் கூடாது!” என்று அந்த அறிக்கையில் நயினார் நாகேந்திரன் கடுமையாக சாடி இருக்கிறார்.

===============

கோவிலில் அன்னதானம் அறிஞர் அண்ணாவின் நினைவு நாளான நேற்று, நெல்லையப்பர் கோவிலில் அன்னதானம் நடைபெற்றது. இதில் கலந்து கொள்ள வந்த நரிக்குறவரின குழந்தைகளை உள்ளே நுழைய அனுமதிக்கவில்லை என்று கூறப்படுகிறது. நரிக்குறவரின குழந்தைகள் இது சர்ச்சையான நிலையில், அதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், “ திருநெல்வேலி நெல்லையப்பர் திருக்கோவிலில், அறிஞர் அண்ணாவின் நினைவு நாளை முன்னிட்டு நடத்தப்பட்ட அன்னதானத்திற்கு வந்த நரிக்குறவரின குழந்தைகளைத் திருக்கோவில் உள்ளேயே முதலில் அனுமதிக்காததோடு, பின் உணவும் வழங்காமல் பசியோடு அனுப்பியிருக்கிறது திமுக கும்பல்! பசியோடு விரட்டப்பட்ட குழந்தைகள் வயிற்றுப் பசிக்காக வந்த குழந்தைகளைக் கோவில் உள்ளே வந்தால் அடித்துவிடுவதாக மிரட்டுவது தான் திமுகவின் பகுத்தறிவா? ஏழை எளிய பழங்குடியினக் குழந்தைகளைக் கோவிலுக்குள் வரவிடாமல் தடுப்பதும், அன்னதான உணவை சாப்பிட விடாமல் தடுப்பதும் தான் திமுகவின் சமூக நீதியா? எங்கும் சமநிலை இருக்க வேண்டும் சட்டப்பேரவையில் சமநிலையை உறுதி செய்வதில்லை, சமூகத்திலும் சமநிலையை உறுதி செய்வதில்லை, இது தான் சபாநாயகர் பதவியில் இருக்கும் ஒரு தலைவர் செய்யும் செயலா? வெட்கக்கேடு! மேடைகளில் சமூக காவலர்கள் வேடம் பசுந்தோல் போர்த்திய புலியைப் போல சமூகநீதி காவலர்களாய் மேடையெங்கும் வேடமிடுவது, பின் சமூகத்தில் பின்தங்கிய ஏழை எளிய மக்களைத் தூக்கி வீசியெறிவது என நாடகமாடும் ஆதிக்க மனநிலை. எனவே, அறிவாலயம் கும்பல் இனி தப்பித் தவறி கூட சமூகநீதி எனும் வார்த்தையை உரைக்கக் கூடாது!” என்று அந்த அறிக்கையில் நயினார் நாகேந்திரன் கடுமையாக சாடி இருக்கிறார். ===============