TN Budget 2026 August First Week Finance Minister Maria Wilson Press Meet google
தமிழ்நாடு

"ஆகஸ்ட் முதல் வாரத்தில் தமிழக பட்ஜெட்" நிதியமைச்சர் மரிய வில்சன்!

தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை ஆகஸ்ட் முதல் வாரத்தில் தாக்கல். ஆட்சி கவிழும் என அனிதா ராதாகிருஷ்ணன் அறியாமையில் பேசுகிறார் என நிதியமைச்சர் மரிய வில்சன் சாடல்.

Kavitha prasanna

TN Budget 2026 August First Week Finance Minister Maria Wilson Press Meet

தமிழக அரசின் நடப்பு ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை வரும் ஆகஸ்ட் மாதம் முதல் வாரத்தில் தாக்கல் செய்யப்படும் என்று தமிழக நிதியமைச்சர் மரிய வில்சன் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி விமான நிலையத்தில் நிதியமைச்சர் பேட்டி

தூத்துக்குடி விமான நிலையத்தில் இன்று (18-7-2026) செய்தியாளர்களை சந்தித்த நிதியமைச்சர் மரிய வில்சன், பட்ஜெட் தாக்கல் மற்றும் எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்கு பதிலளித்து பேசினார்.

ஆகஸ்ட் முதல் வாரத்தில் தமிழக பட்ஜெட்

தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை ஆகஸ்ட் முதல் வாரத்தில் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படும். அதற்கான தயாரிப்புப் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன என்றார்.

மேலும், தமிழக வெற்றிக் கழக ஆட்சி கவிழும் என்று திமுக முன்னாள் அமைச்சரும், தற்போதைய எம்.எல்.ஏ-வுமான அனிதா ராதாகிருஷ்ணன் முற்றிலும் அறியாமையில் பேசி வருகிறார்.

தமிழகத்தின் தற்போதைய உண்மை அரசியல் நிலைப்பாடு என்ன என்பது அவருக்கு இன்னும் புரியவில்லை. அதனால்தான் அவர் தொடர்ந்து இது போன்ற கருத்துக்களைக் கூறி வருகிறார் என்றார்.

திமுக தலைமை மக்கள் தீர்ப்புக்கு தலைவணங்க வேண்டும்

திமுக மற்றும் அனிதா ராதாகிருஷ்ணனின் விமர்சனங்கள் குறித்து நிதியமைச்சர் மரிய வில்சன் மேலும் கூறியதாவது:

அனிதா ராதாகிருஷ்ணன் மக்கள் வழங்கிய தவெக ஆட்சிக்கான தீர்ப்புக்கு மரியாதை கொடுப்பது போலத் தெரியவில்லை.

திமுக தலைமைக்கும் இந்த உண்மை நிலை இன்னும் புரியவில்லை. ஜனநாயகத்தில் மக்கள் கொடுத்த தீர்ப்புக்கு முதலில் அனைவரும் தலைவணங்க பழக வேண்டும்.

முழுமனதுடன் வரவேற்கும் தமிழக மக்கள்

தமிழக முதல்வர் ஊழலுக்கு எதிராக தற்போது எடுத்து வரும் அனைத்து அதிரடி நடவடிக்கைகளையும் 100 சதவீதம் ஒட்டுமொத்த தமிழக மக்களும் முழு மனதுடன் வரவேற்கின்றனர் என்றும் தெரிவித்தார்.

=====