Tamil Nadu Chief Minister and DMK leader Stalin has mentioned his asset details while filing his nomination papers google
தமிழ்நாடு

MK Stalin : சொந்த கார், தங்கம் இல்லை! : கையிருப்பு 10,000 மட்டுமே : முதல்வர் ஸ்டாலின் சொத்து விவரம்!

தமிழக முதல்வரும், திமுக தலைவருமான ஸ்டாலின் தனது சொத்து விபரங்களை வேட்புமனு தாக்கலின் போது குறிப்பிட்டுள்ளார்.

Kannan

கொளத்தூரில் ஸ்டாலின் போட்டி

Tamil Nadu Chief Minister and DMK leader Stalin has mentioned his asset details while filing his nomination papers : தமிழக சட்டப்பேரவை தேர்தல் சூடுபிடித்துள்ள நிலையில், வேட்புமனு தாக்கல் நடைபெற்று வருகிறது.

முதல் நாளான நேற்று கொளத்தூர் தொகுதியில் போட்டியிடும் திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் வேட்புமனுவை தாக்கல் செய்தார்.

இதேபோல் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிடும் நடிகரும், தவெக தலைவருமான விஜய், காரைக்குடி தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோரும் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

முதல்வர் ஸ்டாலின் சொத்து மதிப்பு

வேட்புமனு தாக்கலின் போது முதல்வர் ஸ்டாலின் குறிப்பிட்டு இருந்த சொத்து விவரங்கள் வெளியாகியுள்ளன. அவரது சொத்து மற்றும் வருமான விவரங்கள் அதிகாரப்பூர்வமாக வெளியாகி உள்ளன.

கடந்த நிதியாண்டிற்கான வருமான வரித் தாக்கலின் அடிப்படையில், முதல்வர் ஸ்டாலினின் அசையும் சொத்துக்கள் ரூ.3.30 கோடி ஆகும். அசையா சொத்துக்கள் ரூ.2.96 கோடி ஆகும்.

துர்கா ஸ்டாலின் சொத்து

ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலினின் அசையும் சொத்துக்கள் ரூ.1.32 கோடி ஆகும். அசையா சொத்துகள் ரூ.2.10 கோடி ஆகும். முதல்வர் ஸ்டாலினின் மொத்த வருமானம் 31 லட்சம் ரூபாய் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவரது மனைவி துர்கா ஸ்டாலினின் வருமானம் 5.33 லட்சம் ஆகும். கையிருப்பு பணத்தை பொறுத்தவரை, முதல்வரிடம் 10,000 ரூபாயும், துர்கா ஸ்டாலினிடம் 40,000 ரூபாயும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சொந்தக் கார் இல்லை

குறிப்பிடத்தக்க அம்சமாக, முதல்வர் ஸ்டாலின் பெயரில் எந்தவிதமான பைக், கார் உள்பட சொந்த வாகனங்களோ அல்லது தங்கம் மற்றும் வெள்ளி நகைகளோ இல்லை என்பது பிரமாணப் பத்திரத்தில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

அவரது மனைவி துர்கா ஸ்டாலினிடம் 84 லட்சம் ரூபாய் மதிப்பிலான 720 கிராம் பழைய தங்க நகைகள் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

=====