விஜய் நடிகராக இருந்த போது அவருக்கு தனியார் ஏஜென்சி மூலம் பாதுகாப்பு வழங்கப்பட்டு வந்தது. தவெக கட்சியை தொடங்கிய பிறகு, அவருக்கு மத்திய அரசு சார்பில் ஒய்பிளஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டது.
கூடுதல் பாதுகாப்பு
தேர்தல் பிரசாரத்தின் போது அவருக்கு வந்த கூட்டத்தை பார்த்து பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது. தேர்தல் முடிவுகள் வந்த பிறகு, முதல்வருக்கு இணையான பாதுகாப்பினை விஜய் பெற்றார்.
முதல்வருக்கு உரிய பாதுகாப்பு
முதல்வராக விஜய் பதவி ஏற்றத்தை அடுத்து, Z பிளஸ் பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது. அனைத்து மாநில முதல்வர்களுக்கும் வழங்கப்படும் பாதுகாப்பு விஜய்க்கு அளிக்கப்பட்டு இருக்கிறது.
Z பிளஸ் பாதுகாப்பு
குடியரசுத் தலைவர், பிரதமர், உச்ச நீதிமன்ற, உயர் நீதிமன்ற நீதிபதிகள், மாநில ஆளுநர்கள், மாநில முதலமைச்சர்கள், அமைச்சர்கள் ஆகியோருக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது.
பதவியை பொறுத்து, அரசியல் தலைவர்களுக்கு z+, z, y, y+, X பாதுகாப்புகள் வழங்கப்பட்டு வருகிறது. இதில், மாநில முதலமைச்சர்களுக்கு உயரிய பாதுகாப்பான z+ பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது.
24 மணி நேர பாதுகாப்பு
z+ பாதுகாப்பு என்பது 24 மணி நேரமும் பாதுகாப்பு பணியில் சிறப்பு காவலர்கள் ஈடுபடுவார்கள்.
மத்திய படை பாதுகாப்பு
ரயில்வே பாதுகாப்புப்படை, மத்திய பாதுகாப்புப்படை, தேசிய பாதுகாப்புப் படை, இந்திய தீபெத் எல்லைப் பாதுகாப்புப் படை, மத்திய தொழிற் பாதுகாப்புப் உள்ளிட்ட பணியாளர்கள் இதில் இடம்பெற்றிருப்பார்கள். கிட்டட்ட 55க்கும் மேற்பட்ட பாதுகாப்பு பணியாளர்கள் இருப்பார்கள்.
குண்டு துளைக்காத வாகனங்கள்
குண்டு துளைக்காத வாகனங்கள் மற்றும் பாதுகாப்பு வாகனங்கள் இதில் பயன்படுத்தப்படுகின்றன. மாநிலத்தின் எந்த பகுதிக்கு முதல்வர் சென்றாலும், இத்தகைய பாதுகாப்பு வாகனங்கள் மட்டுமே பயன்படுத்தப்படும்.
அமித் ஷா, ராகுல், ராஜ்நாத்
இசட் பிளஸ் பாதுகாப்பு தற்போது ராகுல் காந்தி, அமித் ஷா, ராஜ்நாத் சிங், சந்திரபாபு நாயுடு உள்ளிட்ட மாநில முதல்வர்களுக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது. இந்த லிஸ்டில் தற்போது விஜய் இணைந்துள்ளார்.
இதன் மூலம் விஜய்க்கு குண்டு துளைக்காத வாகனங்கள் மற்றும் 5 பாதுகாப்பு வாகனங்கள், 55 பாதுகாப்பு பணியாளர்கள் எப்போதுமே உடன் இருப்பார்கள்.
முதல்வர் ஊதியம் - ரூ.2,05 லட்சம்
முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள ஜோசப் விஜய்க்கு ரூ.2,05,000 சம்பளம் வழங்கப்படும். மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடும்போது குறைவானதாகும்.
இருப்பினும், பல்வேறு படிகளுடன் சேர்த்து, முதலமைச்சர் விஜய்க்கு மாத சம்பளமாக ரூ.2.85 லட்சம் வழங்கப்படும். சட்டமன்ற உறுப்பினர்களுக்கான படிகளையும் அவர்கள் பெறுவார்கள்.
இதர சலுகைகள்
இதர செலவுகளை பொறுத்தவரை, தனியாக அரசு இல்லம் ஒதுக்கப்படும். மாநில அரசின் செலவில் குண்டு துளைக்காத எஸ்யூவி காரும், வாகன அணிவகுப்பும் வழங்கப்படும்.
மாநில, மத்திய அரசுக்கான பயணங்களின்போது, விமானம், ரயில், சாலைப் பயணங்களுக்கான முழு செலவையு அரசே ஏற்கும். மாத சம்பளத்தை தாண்டி, இதர சலுகைகளும் கொடுக்கப்படுகின்றன.
தங்கும் இடம், தொலைப்பேசி, மின்சாரம், தண்ணீர் உள்ளிட்டவை தமிழக அரசால் வழங்கப்படும்.
பாதுகாப்பு வகைகள், சிறப்பம்சங்கள்
x பாதுகாப்பு 2 காவல்துறையினர், 2 வாகனங்கள்
Y பாதுகாப்பு 2 வீரர்கள் + 8 காவல்துறையினர், 3 வாகனங்கள்
Y+ பாதுகாப்பு 4 வீரர்கள், 11 காவல்துறையினர், 3 வாகனங்கள்
Z பாதுகாப்பு 6 வீரர்கள், 22 காவல்துறையினர், 5 வாகனங்கள்
Z+ பாதுகாப்பு 55க்கும் மேற்பட்ட பணியாளர்கள், குண்டு துளைக்காத வாகனம், 5 வாகனங்கள்
=====================