Tamil Nadu Congress win 1 Rajya Sabha seat in DMK alliance, 1 seat in TVK in a single year google
தமிழ்நாடு

Rajya Sabha Seats : ”5 மாதங்களில் இரண்டு MP சீட்கள்” : திமுகவிடம் 1, தவெகவிடம் 1 : சாதித்து காட்டிய காங்கிரஸ்...!

தமிழகத்தில் ஒரே ஆண்டில் திமுக கூட்டணியில் 1 ராஜ்யசபா இடம், தவெக கூட்டணியில் 1 இடம் என காங்கிரஸ் அசத்தி இருக்கிறது.

Kannan

அகில இந்திய காங்கிரஸ் கட்சி

Congress party has won two Rajya Sabha seats from Tamil Nadu in five months தேசியக் கட்சியான காங்கிரஸ் தமிழகத்தில் 1967 வரை ஆட்சிப் பொறுப்பில் இருந்தது. பேரறிஞர் அண்ணாவின் திமுக கோட்டையை கைப்பற்றிய பிறகு, காங்கிரசால் தலை தூக்கவே முடியவில்லை.

59 ஆண்டுகள் காத்திருந்த காங்கிரஸ்

59 ஆண்டுகளாக திராவிட கட்சிகளான திமுக, அதிமுக மாறிமாறி ஆட்சியில் இருக்க கூட்டணியில் இருந்தாலும், அதிகாரத்தில் பங்கு இல்லாமல் காங்கிரஸ் இருந்தது.

திமுக கூட்டணியில் காங்கிரஸ்

தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் அங்கம் வகித்த காங்கிரஸ் 27 இடங்களில் போட்டியிட்டு 5ல் வெற்றி பெற்றது. தேர்தலுக்கு முன்பே தவெகவுடன் கூட்டணி, அதிகாரத்தில் பங்கு என்ற கோஷங்கள் எழுந்தாலும், திமுக கூட்டணியில் நீடிக்க வேண்டிய கட்டாயம் இருந்தது.

தவெகவிற்கு காங்கிரஸ் ஆதரவு

தேர்தல் முடிவுகள் மாற, காட்சிகளும் மாறி விட்டன. திமுக ஆட்சியை இழக்க, தவெக ஆட்சி அமைக்க 10 பேரின் ஆதரவு தேவைப்பட்டது. சரியாக முடிவு எடுத்த காங்கிரஸ், தவெகவை ஆதரிக்க விஜய் முதல்வரானார்.

தவெக அமைச்சரவையில் காங்கிரஸ்

அமைச்சரவையில் காங்கிரசுக்கு இடம் கொடுக்கப்பட்ட, 59 ஆண்டுகளுக்கு பிறகு தமிழகத்தில் ஆட்சி, அதிகாரத்தில் காங்கிரஸ் பங்கு பெறும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

திமுக சார்பில் ஒரு காங்கிரஸ் எம்பி

கடந்த பிப்ரவரி மாதம் தமிழகத்தில் இருந்து 6 மாநிலங்களவை எம்.பி-க்களின் பதவிக்காலம் முடிவடைந்தது. இந்த திமுக அணி சார்பில் 4 தேர்ந்து எடுக்கப்பட்டனர். அதில் ஒரு இடம் காங்கிரசுக்கு ஒதுக்கப்பட, அந்தக் கட்சி சார்பில் சார்பில் கிறிஸ்டோபர் திலக் எம்பியானார்.

ராஜ்யசபா இடைத்தேர்தல்

சட்டமன்ற தேர்தலில் போட்டியிட ராஜ்யசபா எம்பி பதவியை அதிமுகவை சேர்ந்த சி.வி. சண்முகம் ராஜினாமா செய்ததால், வரும் 18ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது.

தவெக சார்பில் இந்த இடத்திற்கு ஒருவர் செல்ல வாய்ப்புள்ள நிலையில், காங்கிரசின் கோரிக்கையை ஏற்று, அந்த இடத்தை விட்டுக் கொடுத்திருக்கிறார் முதல்வர் விஜய்.

காங்கிரசுக்கு மேலும் ஒரு எம்பி

எனவே, காங்கிரஸ் சார்பில் மேலும் ஒருவர் ராஜ்யசபாவிற்கு செல்லும் வாய்ப்பு கிடைத்துள்ளது. பிரவீன் சக்வர்த்தி எம்பியாக செல்ல வாய்ப்பு அதிகமாக இருக்கிறது என்று காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தமிழகத்தில் ஆட்சியில் பங்கு, 5 மாதங்களில் 2 ராஜ்யசபா சீட் என தேசியக் கட்சியான காங்கிரஸ் அதிரடி காட்டி இருப்பது குறிப்பிடத்தக்கது.

==================