Tamil Nadu government has issued a sweeping order banning the sale of colored appalams AI generated
தமிழ்நாடு

குழந்தைகளுக்கு Goodnews : ”கலர் அப்பளம்” விற்பனைக்கு தமிழக அரசுத் தடை : நிறமூட்டிகளால் ஆபத்து, உணவு பாதுகாப்புத்துறை.!

கலர் அப்பளங்களை விற்பனை செய்ய தடை விதித்து, தமிழக அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்து இருக்கிறது.

Kannan

Tamilnadu Govt Ban Color Appalams

அரிசி, உளுந்து பயன்படுத்தி அப்பளங்கள் தயாரிக்கப்படுகின்றன. இவை இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் மக்களால் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

கலர் அப்பளங்கள்

கண்களை கவரும் விதமாக கலர் அப்பளங்களும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. குறிப்பாக இவை குழந்தைகளின் விருப்பமான தேர்வாக இருப்பதை யாரும் மறுக்க முடியாது.

உடல் நலத்திற்கு தீங்கு

இவை உடல் நலத்திற்கு ஊறு விளைப்பதாக கூறப்படுவதால், இவற்றை தயாரிக்கவும், விற்பனை செய்யவும் தமிழக அரசு தடை விதித்து இருக்கிறது.

நிறமற்ற அப்பளங்களுக்கு தடையில்லை

அதே நேரம் உளுந்து , அரிசி போன்றவற்றில் தயாரிக்கப்படும் நிறமற்ற அப்பளங்களுக்கு எந்த தடையும் இல்லை.

புற்றுநோய் அபாயம்

கண்ணை கவரும் நிறங்களில் உள்ள இந்த அப்பளங்களை சாப்பிடுவதால் செரிமான கோளாறு, சிறுநீரக பாதிப்பு, அலர்ஜி உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படுவதுடன் புற்றுநோய் ஏற்படவும் வாய்ப்புள்ளது.

பொது இடங்களில் கண்காணிப்பு

சந்தைகள், சுற்றுலா தளங்கள், பொருட்காட்சிகள் போன்ற இடங்களில் இந்த நிறமூட்டி கலந்த அப்பளங்கள் விற்பனை செய்யப்படுகிறதா என்பதை கண்காணிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டாம் - அறிவுரை

குழந்தைகளுக்கு இந்த நிறமூட்டி அப்பளங்களை வாங்கித் தர வேண்டாம். இந்த நிறமிகள் உயிருக்கும் உலை வைக்கும் என தெரிவித்துள்ளனர்.

பெரியவர்களை ஈர்க்கும் கலர் அப்பளங்கள்

அப்பளம், வத்தல் என்றால் பிடிக்காதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். குழந்தைகளை மட்டுமல்ல பெரியவர்களை ஈர்க்கும் வகையில் கலர் கலராக வத்தல் விற்பனை செய்யப்படுகிறது.

பச்சை, ஆரஞ்ச், சிகப்பு, பிங்க், மஞ்சள் உள்ளிட்ட நிறங்களில் இந்த வத்தல்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இதில் செயற்கை நிறமி சேர்க்கப்பட்டுள்ளது. இதனால் இது போன்ற நிறத்தில் கண்ணை கவரும் வகையில் உள்ளது.

அதிலும் பூ வடிவம், நட்சத்திரம், உருளை உள்ளிட்ட வடிவங்களில் இந்த வத்தல்கள் விற்பனை செய்யப்படுகின்றன.

இயற்கை அப்பளங்கள் - நலம் பயக்கும்

பலர் வீட்டிலேயே அப்பளம் தயாரிக்கிறார்கள். அவர்கள் புதினாவை அரைத்து மாவில் கலந்து பச்சை நிறத்திலும் , கேரட்டை அரைத்து கலந்தால் ஆரஞ்ச் நிறத்திலும், பீட்ரூட்டை அரைத்து சேர்த்தால் பிங்க் நிறத்திலும் அப்பளம், வத்தல் கிடைக்கும்.

இது போன்ற இயற்கை நிறம் கொடுக்கும் அப்பளங்களையும் வத்தல்களையும் பயன்படுத்திக் கொள்ளலாம். பலர் தக்காளியில் கூட அப்பளம் செய்கிறார்கள். பார்ப்பதற்கு சிவப்பு நிறத்தில் காணப்படுகிறது.

பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்

ஆகவே, நிறமி சேர்க்கப்பட்ட வத்தல்கள், அப்பளங்களை பொதுமக்கள் வாங்கி நோயை காசு கொடுத்து வாங்க வேண்டாம் என உணவு பாதுகாப்பு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

=================