Tamil Nadu government provided special credit of Rs. 2,000 to those receiving elderly and differently-abled assistance google
தமிழ்நாடு

முதியோர், மாற்றுத் திறனாளி உதவித்தொகை பெறுவோருக்கு ரூ.2,000 சிறப்பு வரவு : முதல்வர் அறிவிப்பு

Tamil Nadu Old Age Pension Scheme : மகளிர் சிறப்பு உரிமைத்தொகை பயனாளிகளை தொடர்ந்து முதியோர் சிறப்பு உதவி தொகையாக ரூபாய் 2000 வரவு வைக்கப்பட்டுள்ளதாக முதலவர் அறிவித்துள்ளார் .

Rohini

சிறப்பு நிதி ரூ 2000

Tamil Nadu Old Age Pension Scheme Latest News : இது குறித்து முதல்வர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் விளிம்பு நிலையில் இருப்போருக்கும் சிறப்பு நிதி கொடுக்கும் வகையில் இந்த 2000 வரவுவைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

யாருக்கெல்லாம் இந்த சிறப்பு தொகை பொருந்தும்

முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த சிறப்பு தொகையானது தமிழகத்தில் உதவிதொகை பெறுவோரான முதியவர்கள் ,கைம்பெண்கள் ,மாற்றுத்திறனாளிகள் வயது முதிர்ந்த திருநங்கையர் ஆகியோருக்கு அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை

நம்பிக்கையுடன் அவர்கள் வைத்த கோரிக்கையை இன்று நிறைவேற்றியுள்ளோம்! நலிவு நிலை போக்கும் சிறப்பு நிதியாக 2000 ரூபாயை மார்ச் மாத ஓய்வூதியத்துடன் சேர்த்து வங்கிக் கணக்கில் வரவு வைத்துள்ளோம்

இதன்படி, பல்வேறு சமூகப் பாதுகாப்புத் திட்டங்களின் கீழ் பயன்பெற்று வரும் முதியோர், கைம்பெண்கள் என, மொத்தம் 29 இலட்சத்து 29 ஆயிரம் பயனாளிகளுக்கு தலா 3200 ரூபாயும்,

5 இலட்சத்து 92 ஆயிரம் மாற்றுத் திறனாளிகளுக்கு தலா 3500 ரூபாயும்,

பராமரிப்பு உதவித்தொகை பெற்றுவரும் 2 இலட்சத்து 58 ஆயிரம் மாற்றுத் திறனாளிகளின் குடும்பங்களுக்கு, தலா 4000 ரூபாயும் இன்று காலை வழங்கியிருக்கிறோம்.

மீன்பிடித் தடை கால உதவித்தொகை

அதுமட்டுமின்றி,மீனவர் குடும்பங்களுக்கு ஏப்ரல் முதல் ஜூன் வரையான காலத்திற்கான மீன்பிடித் தடை கால உதவித்தொகையாக, குடும்பம் ஒன்றுக்கு ரூ.8000 வீதம் மொத்தம் 1,62,900 குடும்பங்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

அதேபோல, நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த 14,870 தேயிலை விவசாயிகள் பயன்பெறும் வகையில், 15 கூட்டுறவுத் தேயிலை தொழிற்சாலைகள் மூலம் கொள்முதல் செய்யப்பட்ட பசுந்தேயிலைக்குக் கிலோ இரண்டு ரூபாய் ஆதார விலை என 8.53 கோடி ரூபாய் நிதி வழங்கப்படுகிறது என்று் முதல்வர் பதிவிட்டுள்ளார் .