Edappadi K. Palaniswami urges Tamil Nadu government to secure Cauvery water without delay. Ai Generated
தமிழ்நாடு

காவிரி நீர் திறப்பில் தாமதம் ஏன்? கர்நாடகாவுக்கு அழுத்தம் தர வேண்டும் என எடப்பாடி வலியுறுத்தல்...

காவிரியில் இருந்து விரைந்து தண்ணீரை பெற்று தர வேண்டும் என தமிழக அரசுக்கு எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல் ...

NARENDRAN K

தஞ்சையில் அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் :

தஞ்சையில் அதிமுக சார்பாக தமிழக அரசை கண்டித்து கண்டன ஆர்பாட்டமானது நடைபெற்றது அதில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி கலந்துகொண்டு தமிழக அரசை கடுமையாக சாடினார்.

அந்த கூட்டத்தில் அவர் தமிழக அரசானது காவேரியில் இருந்து நீரை பெற்று தர தவறிவிட்டது என்றும் அதுமட்டுமல்லாமல் முதலமைச்சர் ஜோசப் விஜய் விவசாயிகளுக்கு துரோகம் இளைத்துவிட்டார் எனவும் கடுமையாக விமர்சனம் செய்திருந்தார் .

முதலமைச்சரை நோக்கி கடுமையான விமர்சனம் :

இந்த ஆர்ப்பாட்டத்தில் அவர் குறிப்பாக தவெக அரசு விவசாயிகளுக்கு அளித்த தேர்தல் வாக்குறுதியான பயிர்க்கடன் முழுமையாக ரத்து போன்ற பல்வேறு வாக்குறிதுகள் கிடப்பில் போடப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டினார்

அதுமட்டுமல்லாமல் முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்கள் நாட்டில் உள்ள விவசாயிகள் மீது கவனம் செலுத்தாமல் அவருடைய அறை மற்றும் அலுவலத்தை இடம் மாற்றுவது தொடர்பாகவே குறிக்கோளாக உள்ளார் என்றும்

இதற்க்கு முன்பாக அவரும் சரி திமுக தலைவர் முன்னாள் முதல்வர் மு க ஸ்டாலினும் சரி அதே அலுவலகத்தை தான் பயன்படுத்தினோம் ஆனால் இப்பொழுது உள்ள முதல்வர் இந்த அறையில் இருந்து பனி செய்ய என்ன நெருக்கடி என அவர் பேசியிருந்தார்.

வேலுமணி மற்றும் நத்தம் விஸ்வநாதன் அவரது ஆதரவாளர்கள் குறித்து :

இந்த கூட்டத்தில் அவர் குறிப்பாக அதிமுக-வினுடைய முக்கிய தலைவர்களுள் ஒருவரான எஸ்பி. வேலுமணி மற்றும் நத்தம் விஸ்வநாதனை கடுமையாக சாடினார் அதில் அவர் பேசியதாவது " சிலர் கூட்டத்தை புறக்கணித்து விட்டால் அதிமுக தொண்டர்கள் சோர்ந்து போய்விடுவார்கள், என எதிர்பார்த்தார்கள் ஆனால் அது உண்மையல்ல எனவும் அவர் அந்த கூட்டத்தில் பேசிருந்தார் .

குருவை சாகுபடி பெரிதும் பாதிப்பு:

கடந்த ஆண்டுகளில் குருவை சாகுபடிக்கு தண்ணீர் முறையாக வந்து கொண்டு இருந்ததால் குருவை விளைச்சல் எந்த பாதிப்பும் இல்லாமல் முறையாக நடந்து வந்ததாகவும் ஆனால் தற்பொழுது அது முற்றிலும் பாதிக்கப்பட்டு ஐந்து லட்சத்தில் இருந்து இரண்டு லட்சமாக குறைந்து விட்டதாகவும் அது விவசாயிகளுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்திவிட்டதாகவும் எனவே தமிழக அரசு அந்த இழப்பை ஈடு செய்ய விவசாயிகளுக்கு உரிய நஷ்ட ஈடு வழங்க வேண்டும் எனவும் அவர் பேசியிருந்தார் .