Tamil Nadu Government Polytechnic Colleges: Notification Released for Diploma Admissions for the 2026-27 Academic Year! source: google
தமிழ்நாடு

தமிழக அரசு பாலிடெக்னிக் கல்லூரிகள் : 2026-27 கல்வியாண்டு பட்டயப் படிப்பு மாணவர் சேர்க்கைக்கான அறிவிப்பு வெளியீடு!

பட்டியலின (SC/ST) மாணவர்களுக்கு விண்ணப்பக் கட்டணத்திலிருந்து முழு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

Kavitha prasanna

Tamil Nadu Government Polytechnic Colleges: Notification Released for Diploma Admissions for the 2026-27 Academic Year!

தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் பாலிடெக்னிக் கல்லூரிகளில் 2026-27 ஆம் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பைத் தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் வெளியிட்டுள்ளது.

இக்கல்வியாண்டில் நேரடி முதலாமாண்டு, நேரடி இரண்டாமாண்டு மற்றும் பகுதிநேரப் பட்டயப் படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்கள் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் வழிமுறை மற்றும் தகுதிகள்

மாணவர்கள் https://www.tnpoly.in என்ற இணையதள முகவரியைப் பயன்படுத்தி விண்ணப்பப் படிவங்களைப் பதிவு செய்யலாம்.

TNEA சேவை மையங்கள்

இணைய வசதி இல்லாத கிராமப்புற மாணவர்கள், மாவட்டந்தோறும் அமைக்கப்பட்டுள்ள டிஎன்இஏ (TNEA) சேவை மையங்கள் வாயிலாகத் தங்களின் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கலாம்.

நேரடி முதலாமாண்டு சேர்க்கைக்கான தகுதி

பத்தாம் வகுப்பு அல்லது அதற்கு இணையான தேர்வுகளில் தேர்ச்சி பெற்றவர்கள் நேரடி முதலாமாண்டு சேர்க்கைக்கு விண்ணப்பிக்கத் தகுதியுடையவர்கள்.

நேரடி இரண்டாமாண்டு சேர்க்கைக்கான தகுதி

பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் அல்லது பத்தாம் வகுப்புக்குப் பிறகு இரண்டு ஆண்டுகள் ஐடிஐ (ITI) போன்ற தொழிழ்நுட்பப் படிப்புகளை முடித்தவர்கள் நேரடி இரண்டாமாண்டு சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம்.

பகுதிநேரப் பட்டயப் படிப்பு சேர்க்கைக்கான தகுதி

பத்தாம் வகுப்புத் தகுதியுடன், சம்பந்தப்பட்ட துறையில் இரண்டு ஆண்டுகள் பணி அனுபவம் கொண்டவர்கள் பகுதிநேரப் பட்டயப் படிப்பு பிரிவில் சேர முடியும்.

முக்கியக் காலக்கெடு மற்றும் தேவையானவை

முதலாமாண்டு மற்றும் பகுதிநேரப் படிப்புகளுக்கான விண்ணப்பப் பதிவு மே 4-ஆம் தேதி தொடங்கி, மே 30-ஆம் தேதி வரை நடைபெறும்.

லேட்டரல் எண்ட்ரிக்கு கடைசி தேதி

ஆனால், நேரடி இரண்டாமாண்டு (Lateral Entry) சேர்க்கைக்கு விண்ணப்பிக்கக் கடைசித் தேதி மே 25 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தேவையான சான்றிதழ்கள்

விண்ணப்பிக்கும் போது மாணவர்கள் தங்களின் மதிப்பெண் சான்றிதழ், சாதிச் சான்றிதழ் மற்றும் புகைப்படங்களை இணையதளத்தில் குறிப்பிட்ட அளவுகளில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

SC/ST - விண்ணப்பக் கட்டணத்தில் முழு விலக்கு

விண்ணப்பக் கட்டணத்தை இணையதளம் வழியாகவே செலுத்தலாம். சமூக நீதி அடிப்படையில், பட்டியலின (SC/ST) மாணவர்களுக்கு விண்ணப்பக் கட்டணத்திலிருந்து முழு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

தகுதியுள்ள மாணவர்கள் இக்காலக்கெடுவிற்குள் விண்ணப்பித்துப் பயன்பெறுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

அதிகாரப்பூர்வ இணையதள முகவரி : https://www.tnpoly.in/

=====