Tamil Nadu Governor Arlekar to Meet Amit Shah Amid Law and Order Concerns Google
தமிழ்நாடு

TN Governor Meet Home Minister Amit shah : சட்டம்-ஒழுங்கு விவகாரம் : குறித்து முக்கிய ஆலோசனை...!

தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு தொடர்பாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றச்சாட்டுகளை முன்வைத்து வரும் நிலையில், ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் நாளை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்திக்கிறார் .

NARENDRAN K

டெல்லியில் அமித் ஷாவுடன் சந்திப்பு :

தமிழ்நாடு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் நாளை டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்திக்க உள்ளார்.

தமிழ்நாட்டின் முழுநேர ஆளுநராகப் பொறுப்பேற்ற பிறகு, அவர் அமித் ஷாவைச் சந்திப்பது இதுவே முதல் முறை எனக் கூறப்படுகிறது.

இந்த சந்திப்பின்போது தமிழ்நாட்டின் தற்போதைய சட்டம்-ஒழுங்கு நிலவரம் குறித்து ஆலோசிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

சட்டம் ஒழுங்கு குறித்து மத்திய அரசு அறிக்கை கேட்டதாக தகவல்

தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு நிலைமை மோசமடைந்து வருவதாக திமுக, அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றன.

குறிப்பாக, தீபாவளி நாளில் நடைபெற்ற கொலைச் சம்பவங்கள், தேனியில் சிறப்பு உதவி ஆய்வாளர் கொல்லப்பட்ட சம்பவம் உள்ளிட்டவை அரசியல் ரீதியாகப் பேசுபொருளாகியுள்ளன.

இந்தச் சூழலில், தமிழ்நாட்டின் சட்டம்-ஒழுங்கு நிலவரம் குறித்து ஆளுநரிடம் மத்திய உள்துறை அமைச்சகம் அறிக்கை கேட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ்நாட்டின் முழுநேர ஆளுநராக நியமனம் :

கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற ஆளுநர்கள் மாற்றத்தின்போது, கேரள ஆளுநராக இருந்த ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் தமிழ்நாட்டின் பொறுப்பு ஆளுநராக நியமிக்கப்பட்டார்.

இதையடுத்து, கடந்த அக்டோபர் 12ஆம் தேதி அவர் தமிழ்நாட்டின் முழுநேர ஆளுநராக நியமிக்கப்பட்டார்.

அக்டோபர் 15ஆம் தேதி சென்னையில் உள்ள லோக் பவனில் தமிழ்நாட்டின் 27-வது ஆளுநராக பொறுப்பேற்றுக் கொண்டார்.

அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் பெறும் சந்திப்பு :

தமிழ்நாட்டில் ஆளும் கட்சிக்கும் எதிர்க்கட்சிகளுக்கும் இடையே சட்டம்-ஒழுங்கு விவகாரம் தொடர்பாகத் தொடர்ந்து அரசியல் மோதல் நிலவி வருகிறது.

இந்த நிலையில், ஆளுநர் அர்லேகர் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவைச் சந்திப்பது முக்கியத்துவம் பெற்றுள்ளது.

இந்த சந்திப்பில் தமிழ்நாட்டின் தற்போதைய அரசியல் சூழல், மாநில அரசின் நடவடிக்கைகள் மற்றும் சட்டம்-ஒழுங்கு தொடர்பான புகார்கள் குறித்து ஆலோசிக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.

======================