மசோதாக்கள் - ஆளுநர் அனுமதி
TN Governor Arlekar Approves 12 Key Bills passed by TVK Govt : தமிழகத்தில் திமுக ஆட்சிக் காலத்தில் ஒரு மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் கிடைப்பது என்பது, சிக்கலாகவே இருந்தது
தமிழக அரசு நிறைவேற்றும் மசோதாக்களுக்கு ஒப்புதல் பெறுவதில் ஆளுநர் மாளிகைக்கும், ஆளும் தரப்பிற்கும் இடையே நீண்ட நாட்கள் இழுபறி நீடிப்பது வழக்கமாக இருந்தது. ஆனால், இப்போது நிலைமை தலைகீழாக மாறி இருக்கிறது.
மின்னல் வேகத்தில் ஒப்புதல்
பட்ஜெட் கூட்டத்தொடர் நிறைவடைந்த சில தினங்களிலேயே, மாண்புமிகு ஆளுநர் அவர்கள் கோப்புகளைத் தாமதப்படுத்தாமல் மின்னல் வேகத்தில் முடிவெடுத்து கையெழுத்திட்டுள்ளார்.
தவெக அரசுக்கு வெற்றி
இது தவெக அரசின் திட்டங்களை எவ்வித நிர்வாக முடக்கமும் இன்றி, உடனடியாக மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு செல்ல வழிவகை செய்யும் என அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
மசோதாக்களின் முக்கியத்துவம்
ஆளுநரின் ஒப்புதல் பெற்றுள்ள இந்த 12 மசோதாக்களும் தமிழகத்தின் உள்கட்டமைப்பு மேம்பாடு, மக்கள் நலத் திட்டங்கள், கல்வி மற்றும் பொருளாதார வளர்ச்சி சார்ந்த மிக முக்கிய சட்ட சீர்திருத்தங்கள் ஆகும்.
விரைவில் அரசாணைகள்
பட்ஜெட் கூட்டத்தொடரில் இதற்கான நிதி ஒதுக்கீடுகள் மற்றும் சட்ட வரைவுகள் விரிவாக விவாதிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது. ஆளுநரின் இந்த உடனடிப் பச்சைக்கொடி மூலம், இந்த திட்டங்களுக்கான அரசாணைகள் (GO) மிக விரைவில் வெளியிடப்பட்டு சட்ட வடிவம் பெறவுள்ளன.
தவெக அரசு கொண்டு வந்து நிறைவேற்றிய மசோதாக்கள்:
* நகர் ஊரமைப்பு திருத்த மசோதா (DTCP)
* எம்.எல்.ஏ.க்களுக்கு கார் வழங்கும் தொடர்பான மசோதா
* டாஸ்மாக் மதுபானங்கள் மீதான மதிப்பு கூட்டு வரி (VAT) திருத்த மசோதா
* தமிழ்நாடு முதலீட்டு ஊக்குவிப்பு ஆணைய மசோதா
* டி.என்.பி.எஸ்.சி. (TNPSC) கூடுதல் பணிகள் திருத்த மசோதா
* விவசாய விளைபொருள் சந்தைப்படுத்துதல் திருத்தச் சட்டம்
* ஊராட்சிகள் சட்டத் திருத்த மசோதா, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் திருத்த மசோதா.
பல்கலை திருத்த மசோதா - ஜனாதிபதிக்கு அனுப்பிவைப்பு
இதில் தனியார் பல்கலைகழக திருத்த மசோதா தவிர்த்து மற்ற மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார். அந்த மசோதா மட்டும் குடியரசு தலைவருக்கு அனுப்பி வைக்கப்பட்டு இருக்கிறது.
கூட்டத்தொடர் நிறைவடைந்த 5 நாட்களுக்குள் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது, இதனால் இவை சட்டமான நிலையில் கடந்த 15ம் தேதி வெளியான தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளன.
தவெக அரசுக்கு வெற்றி
ஆளுநர் அர்லேகர் 12 மசோதாக்களுக்கு விரைந்து ஒப்புதல் தந்து இருப்பது, தவெக அரசுக்கு கிடைத்த பெரிய வெற்றியாக பார்க்கப்படுகிறது
==========
====