Government of Tamil Nadu has imposed various restrictions on converting agricultural lands for non-agricultural use and on carrying out construction activities
விவசாய நிலங்களை, சுய தேவை மற்றும் விற்பனை நோக்கில் வேறுவகை நிலமாக மாற்றி காண்பித்து சொந்தமாக பயன்படுத்துவது, வணிக ரீதியாக விற்பனை செய்வது அதிகரித்து வருகிறது.
இதன் மூலம் விவசாய நிலங்கள் வேறுவகை பயன்பாட்டிற்கு செல்வதால், வேளாண் தொழில் பாதிக்கப்படுகிறது.
இதை தடுக்கும் விதமாக தமிழக அரசு அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்து இருக்கிறது.
9 ஆவணங்கள் அவசியம்
இது குறித்துஅரசு தெரிவித்துள்ளதாவது, விவசாய நிலத்தில் வீடு கட்டவோ அல்லது வேறு ஏதாவது ஒரு கட்டுமானப் பணிகளை மேற்கொள்ள வேண்டுமென்றால், நிலத்தின் கிரய பத்திரம் அல்லது குத்தகைப் பத்திரம், பட்டா நகல் என 9 ஆவணங்களை சமர்பிக்க வேண்டும்.
நிலத்தை சுற்றியுள்ள கட்டிடங்களின் வரைபடங்கள்
அந்த நிலத்தில் கழிவு நீர் மற்றும் மழைநீர் வெளியேறும் வழியை வரைப்படம் மூலமாகவும் காட்ட வேண்டும் என்றும் நிலத்தை சுற்றி 500 மீட்டர் தூரத்தில் உள்ள அனைத்து கட்டிடங்களுக்குமான வரைப்படமும் காட்ட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நகல்களை சமர்பித்தால் மட்டுமே அனுமதி
சம்பந்தப்பட்ட நிலத்தினுடைய சிட்டா நகல் உள்ளிட்ட 9 நகல்களை சமர்பிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்போது விவசாய நிலத்தை விவசாயம் அல்லாத கட்டுமான பணிக்காக பயன்படுத்துவதற்கு அனுமதி வழங்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
தடையில்லா சான்றிதழ் அவசியம்
இந்த விளைநிலம் தொடர்பாக சம்பந்தப்பட்ட வருவாய் கோட்டாட்சியர் அல்லது வேளாண்மை துறையினுடைய இணை இயக்குநர் அல்லது நீர்வளத்துறை செயற்பொறியாளர் ஆகிய அதிகாரிகளிடன் சமர்பித்து தடையில்லாத சான்றிதழும் பெற வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விளைநிலங்களில் வீடு அல்லது கட்டிடம் கட்ட வேண்டுமென்றால், நில ஆவணங்கள் மட்டும் போதாது. நிலத்தின் சுற்றுப்புற விவரங்கள், நீர் வெளியேறும் வசதிகள் உள்ளிட்ட அனைத்து விவரங்களை சமர்பிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
===============