17வது சட்டமன்றம்
The Tamil Nadu Legislative Assembly session began with the singing of the 'Tamil Thai Vazhthu', followed by the National Anthem.
17வது சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் மாதம் நடத்தப்பட்டு, மே 4ம் தேதி முடிவுகள் வெளியாகின. 108 இடங்களில் வெற்றி பெற்ற தவெக, காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகளின் ஆதரவோடு ஆட்சி அமைத்தது.
தமிழகத்தில் கூட்டணி ஆட்சி
முதல்வரா விஜய் பொறுப்பேற்க, 74 ஆண்டுகால தமிழக அரசியல் வரலாற்றில் முதன்முறையாக கூட்டணி ஆட்சி அமைத்து சாதித்து காட்டினார் முதல்வர் விஜய்.
இந்தநிலையில், சட்டமன்ற கூட்டத்தொடர் ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் உரையுடன் தொடங்கியது. கூட்டத் தொடரில் பங்கேற்க வந்த ஆளுநருக்கு, காவல்துறை அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது.
தமிழ்த்தாய் வாழ்த்தா? தேசிய கீதமா?
பின்னர் ஆளுநர் அவைக்கு வந்தார். கூட்டத் தொடரில் முதலில் இசைக்கப்படுவது தமிழ்த்தாய் வாழ்த்தா அல்லது தேசிய கீதமா என்ற எதிர்பார்ப்பு இருந்தது.
முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து
ஆனால் எந்த சலசலப்பும் இன்றி, முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது. பின்னர் தேசிய கீதம் பாடப்பட்ட பிறகு ஆளுநர் தனது உரையை வாசித்தார்.
முன்னதாக முதல்வர் மற்றும் அமைச்சர்கள் பதவியேற்பு விழாக்களின் போது, ஆளுநர் மாளிகையில் முதலில் வந்தே மாதரமும், இரண்டாவதாக தேசிய கீதமும், மூன்றாவதாக தமிழ்த் தாய் வாழ்த்தும் பாடப்பட்டது இது சர்ச்சையை உருவாக்கியது.
இந்தச் சூழலில், இன்றைய சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் தமிழ்த் தாய் வாழ்த்துடன் தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஜனவரி மாதம் அப்போதைய ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமையில் சட்டப்பேரவைக் கூட்டம் தொடங்கி போது, வந்தே மாதரம் பாடல் இசைக்கப்படாததை சுட்டிக்காட்டி, அரசு தயாரித்து அளித்த உரையைப் பேரவையில் வாசிக்காமல் வெளியேறினார்.
அதன்பின், அரசு தயாரித்து அளித்த உரை மட்டுமே பேரவைக் குறிப்பில் இடம்பெற வேண்டும் என்பதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அப்போதைய பேரவைத் தலைவர் மு.அப்பாவு தமிழ் உரையை வாசித்தார்
=================