Vijay Surpasses M.G.R.'s Record!The Vote Share Secured by Parties in Their Debut Elections-The Complete List!|tamilnadu source: google, ai generated
தமிழ்நாடு

தமிழக அரசியல் வரலாறு: எம்ஜிஆரின் சாதனையை முறியடித்த விஜய்! : முதல் தேர்தலில் கட்சிகள் பெற்ற வாக்கு சதவீதம், முழு லிஸ்ட்!

2026 சட்டமன்றத் தேர்தலில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் பெற்ற வாக்குச் சதவீதம் ஒட்டுமொத்த இந்திய அரசியலையும் உற்றுநோக்க வைத்துள்ளது.

Kavitha prasanna

Vijay Surpasses M.G.R.'s Record!The Vote Share Secured by Parties in Their Debut Elections-The Complete List!|tamilnadu

முதல் தேர்தலிலேயே தவெக படைத்த இமாலயச் சாதனை

தமிழக அரசியல் களத்தில் ஒரு புதிய கட்சி தனது முதல் தேர்தலிலேயே எவ்வளவு வாக்குகளைப் பெறுகிறது என்பது அக்கட்சியின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் முக்கிய காரணியாகும்.

இந்திய அரசியலை உற்றுநோக்க வைத்த தவெக

அந்த வகையில், 2026 சட்டமன்றத் தேர்தலில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் பெற்ற வாக்குச் சதவீதம் ஒட்டுமொத்த இந்திய அரசியலையும் உற்றுநோக்க வைத்துள்ளது.

49 ஆண்டுகால சாதனை தகர்ப்பு

தமிழகத்தில் இதுவரை ஒரு புதிய கட்சி தனது முதல் தேர்தலில் பெற்ற அதிகபட்ச வாக்குச் சதவீதமாக, 1977-ல் எம்.ஜி.ஆரின் அதிமுக பெற்ற 30.40% வாக்குகளே சாதனையாக இருந்தது.

எம்.ஜி.ஆரின் சாதனையை முறியடித்த விஜய்

ஆனால், தற்போது 2026 தேர்தலில் 34.92% வாக்குகளைக் குவித்து, சுமார் அரை நூற்றாண்டுகால சாதனையைத் விஜய்யின் தவெக கட்சி முறியடித்துள்ளது.

முக்கியக் கட்சிகளின் தொடக்ககால வாக்குச் சதவீதங்கள்

தமிழகத்தின் மற்ற முக்கியக் கட்சிகள் தங்களின் முதல் சட்டமன்றத் தேர்தலில் சந்தித்த வாக்கு விவரங்கள்

திமுக (1957): திமுக தனது முதல் தேர்தலில் சுயேச்சையாகப் போட்டியிட்டு 14.00% வாக்குகளைப் பெற்றது.

அதிமுக (1977) : எம்.ஜி.ஆர் போட்டியிட்ட நிலையில் 30.40% வாக்குகள் பெற்று சாதனை.

மேலும் படிக்க:Vote Details of TVK Candidates :108 தொகுதிகளில் தவெக வேட்பாளர்கள் பெற்ற வாக்கு விவரங்கள்.. முழுமையான லிஸ்ட் !

தமாகா (1996): மூப்பனார் தலைமையிலான தமிழ் மாநில காங்கிரஸ் அதன் முதல் தேர்தலில் 9.30% வாக்குகளைப் பதிவு செய்தது.

தேமுதிக (2006): நடிகர் விஜயகாந்த் தொடங்கிய தேமுதிக, முதல் தேர்தலில் 8.40% வாக்குகளை ஈர்த்தது.

பாமக மற்றும் மதிமுக: பாமக தனது முதல் தேர்தலில் (1991) 5.80% வாக்குகளையும், மதிமுக தனது முதல் தேர்தலில் (1996) அதே 5.80% வாக்குகளையும் பெற்றன.

மநீம மற்றும் நாதக: அண்மைக்கால கட்சிகளான கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் 2021-ல் 2.60% வாக்குகளையும், சீமானின் நாம் தமிழர் கட்சி 2016-ல் 1.10% வாக்குகளையும் பெற்றிருந்தன.

புதிய அரசியல் சகாப்தம்

இந்த ஒப்பீட்டின் மூலம், திராவிடக் கட்சிகள் மற்றும் பிற மாநிலக் கட்சிகள் தங்களின் முதல் தேர்தலில் பெற்ற வாக்குச் சதவீதத்தை விட, தவெக மிக அதிக அளவிலான வாக்குகளைப் பெற்றுள்ளது.

இது தமிழக அரசியலில் தவெக புதிய மற்றும் பலமான மூன்றாவது சக்தி உருவெடுத்துள்ளதை உறுதிப்படுத்துகிறது.

====