Tamil New Year 2026 Festival: Additional Special Trains from Chennai — Southern Railway google
தமிழ்நாடு

தமிழ் புத்தாண்டு பண்டிகை ; சென்னையிலிருந்து கூடுதல் சிறப்பு ரயில்கள் : தெற்கு ரயில்வே அறிவிப்பு!

Tamil New Year 2026 Special Train Announcement : வருகிற தமிழ் புத்தாண்டு பண்டிகை முன்னிட்டு சென்னை எழும்பூரிலிருந்து சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது .

Rohini

சிறப்பு ரயில் இயக்கம்

Tamil New Year 2026 Special Train Announcement : தமிழ் புத்தாண்டு பண்டிகையை முன்னிட்டு ஏற்படும் பயணிகள் கூட்ட நெரிசலைத் தவிர்க்க, சென்னை எழும்பூரிலிருந்து திருநெல்வேலி மற்றும் திருவனந்தபுரத்திற்குச் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தென்னக இரயில்வே அறிவித்துள்ளது.

முன்பதிவு விவரம்

திருநெல்வேலி - சென்னை எழும்பூர் (06070) ரயிலுக்கான முன்பதிவு இன்று (ஏப்ரல் 7) மதியம் 14.00 மணிக்குத் தொடங்கும் எனவும் மற்ற அனைத்து சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு நாளை (ஏப்ரல் 8) காலை 08.ணிக்குத் தொடங்கும் எனவும் தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது

திருநெல்வேலி - சென்னை எழும்பூர் அதிவிரைவு சிறப்பு ரயில்

தமிழ் புத்தாண்டு விடுமுறையை முன்னிட்டு சென்னை எழும்பூர் திருநெல்வேலி - எழும்பூர்: ஏப்ரல் 9-ம் தேதி (வியாழன்) இரவு 23.40 மணிக்குப் புறப்பட்டு, மறுநாள் காலை 10.45 மணிக்குச் சென்னை எழும்பூர் வந்தடையும்.எழும்பூர் - திருநெல்வேலி: ஏப்ரல் 10-ம் தேதி (வெள்ளி) மதியம் 12.30 மணிக்குப் புறப்பட்டு,

அதே நாள் இரவு 23.30 மணிக்குத் திருநெல்வேலி சென்றடையும்.இந்த ரயிலானது கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, விழுப்புரம், செங்கல்பட்டு மற்றும் தாம்பரம் ஆகிய ரயில் நிறுத்தங்களில் நின்று செல்லும் என்றும் தெரிவித்துள்ளது

சென்னை எழும்பூர் - திருவனந்தபுரம் வடக்கு எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயில்

தமிழ்ப்புத்தாண்டு சிறப்பு ரயிலாக எழும்பூர் - திருவனந்தபுரம்: ஏப்ரல் 10-ம் தேதி (வெள்ளி) இரவு 23.55 மணிக்குப் புறப்பட்டு, மறுநாள் மாலை 18.00 மணிக்குத் திருவனந்தபுரம் வடக்கு (கொச்சுவேலி) சென்றடையும் அதே ரயில் திருவனந்தபுரம் - எழும்பூர்: ஏப்ரல் 15-ம் தேதி (புதன்) மதியம் 15.45 மணிக்குப் புறப்பட்டு, மறுநாள் காலை 11.45 மணிக்குச் சென்னை எழும்பூர் வந்தடையும்.

இந்த சிறப்பு ரயில் இயக்கமாக அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர், பாலக்காடு, திருச்சூர் மற்றும் எர்ணாகுளம் டவுன் ஆகிய ரயில் நிறுத்தங்களில் நிறு செல்லும் என்றும் தெரிவித்துள்ளது.

இதர சிறப்பு ரயில்கள்

இதர சிறப்பு ரயிலாக =சென்னை சென்ட்ரல் - தூத்துக்குடி (06151/06152): ஏப்ரல் 13-ம் தேதி இரவு 23.50 மணிக்குச் சென்னையிலிருந்து புறப்படும் என்றும் தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

அதைப்போல சென்னை சென்ட்ரல் - கொல்லம் (06119/06120): ஏப்ரல் 15-ம் தேதி மதியம் 15.10 மணிக்குச் சென்னையிலிருந்து புறப்படும்.என்றும் அறிவித்துள்ளது