Tamil poet Song Writer Vairamuthu has been awarded the Jnanpith Award 2026 , the highest literary award in the field. google
தமிழ்நாடு

தமிழ் கவிஞர் வைரமுத்துவுக்கு இலக்கியத் துறையில், மிக உயரிய விருதான ஞானபீட விருது அறிவிக்கப்பட்டுள்ளது!

Tamil Poet Vairamuthu has been awarded the Jnanpith Award : கவிஞரும், திரைப்பட பாடலாசிரியருமான வைரமுத்துவுக்கு, இலக்கியத் துறையில் வழங்கப்படும் மிகச் சிறந்த ஞானபீட விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

Rohini

ஞானபீட விருது

Tamil Poet Vairamuthu has been awarded the Jnanpith Award : இலக்கியத்தில் பல்வேறு சாதனைகளைப் படைத்திருக்கும் வைரமுத்துவுக்கு, நாட்டின் இலக்கியத் துறையில், மிக உயரிய விருதாகக் கருதப்படும் ஞானபீடம் விருது அறிவிக்கப்பட்டிருக்கிறது

தமிழுக்குக் கிடைத்த பெரும் பெருமை

சுமார் கால் நூற்றாண்டுக்குப் பிறகு தமிழுக்குக் கிடைத்த பெரும் பெருமை என இந்த அறிவிப்பை இலக்கியத் துறையினர் கொண்டாடி வருகிறார்கள். பலதுறை தலைவர்கள் கவிஞர் வைரமுத்துவுக்கு தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

கவிஞரின் பிற படைப்புகள்

கடந்த 1972ஆம் ஆண்டு, வைகறை மேகங்கள் என்ற முதல் கவிதை நூலின் மூலம் தன வாழ்வை தொடங்கிய வைரமுத்து , எண்ணற்ற கவிதைத் தொகுப்புகளையும், நாவல்கள் உள்பட 40க்கும் மேற்பட்ட நூல்களையும் வெளியிட்டுள்ளார்.

அது மட்டுமின்றி, நூற்றுக்கணக்கான திரைப்படங்களில் இதுவரை 7,500க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு பாடல்களை இயற்றியுள்ளார். அதிகபடச்சமாக 7 தேசிய விருதுகளை பெற்ற இந்தியாவின் ஒரே பாடலாசிரியர் என்ற பெருமையையும் பெற்றுஇருக்கிறார் வைரமுத்து

தமிழகத்திற்கு மூன்றாவது ஞானபீட விருது

தற்போது தமிழகத்திலிருந்து மூன்றாவது கவிஞராக ஞானபீட விருதினை வைரமுத்து பெறுகிறார்.

தமிழ் இலக்கியத் துறையில் இதுவரை 1975ஆம் ஆண்டு எழுத்தாளர் அகிலன், 2002ஆம் ஆண்டு எழுத்தாளர் ஜெயகாந்தன் ஆகிய இரண்டு பேர் மட்டுமே ஞானபீட விருது பெற்றிருக்கிறார்கள் எனபது குறிப்பிடத்தக்கது

இலக்கியத்தில் கலைஞர்களின் பங்களிப்புக்காக மத்திய அரசு வழங்கும் உயரிய விருதுகளான பத்மஸ்ரீ மற்றும் பத்மபூஷண் விருதுகளையும் கவிஞர் வைரமுத்து பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது