கிறிஸ்துமஸ் பெருவிழா
TVK Vijay Speech At Samathuva Christmas Celebration 2025 : உலகமெங்கும் டிசம்பர் 25-ஆம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகை உற்சாகமாகக் கொண்டாடப்பட உள்ளது. தமிழகத்தில் பல்வேறு கட்சிகள் சார்பில் கிறிஸ்துமஸ் விழாக்கள் கொண்டாடப்பட்டு வருகின்றன. அந்த வகையில், தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் மாமல்லபுரத்தில் கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டது. கட்சி தொடங்கிய பிறகு, முதன்முறையாக தவெக சமத்துவ கிறிஸ்துமஸ் விழாவினை கொண்டாடியது.
கிறிஸ்துமஸ் விழாவில் விஜய்
மாமல்லபுரத்தை அடுத்த பூஞ்சேரி பகுதியில் உள்ள ஒரு தனியார் நட்சத்திர விடுதியில் நடைபெற்ற விழாவில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் நேரில் கலந்து கொண்டார். தமிழகம் முழுவதிலும் இருந்து கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் மாவட்டப் பொறுப்பாளர்களும் கலந்து கொண்டனர்.
க்யூஆர் குறியீடு
சுமார் 1500 பேர் வரை பங்கேற்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. விழாவின் பாதுகாப்ப், கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் வகையில், கியூ.ஆர் குறியீடு உள்ளவர்களுக்கு மட்டுமே விழா அரங்கிற்குள் நுழைய அனுமதி வழங்கப்பட்டது.
உற்சாக வரவேற்பு
விழாவில் பங்கேற்க வந்த தவெக தலைவர் விஜய்க்கு, சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. மேடையை அலங்கரித்தவர்களுக்கு பொன்னாடை போர்த்தி, கிறிஸ்துமஸ் வாழ்த்தினை விஜய் தெரிவித்துக் கொண்டார்.
தாயன்பு கொண்ட தமிழகம்
நிகழ்ச்சியில் பேராயர்கள் பேசிய பிறகு, விஜய் உரை நிகழ்த்தினார். ”இது ஒரு அன்பான தருணம், அழகான தரும். தாயன்பு கொண்ட மண் தான் தமிழகம். ஆகவே, அனைத்து விழாக்களையும் மகிழ்ச்சியாக கொண்டி வருகிறது. எனவே தான், அரசியலுக்கு வந்த பிறகு கடவுள் நம்பிக்கை உண்டு என்று அறிவித்தது ஏன் என்றால், மக்கள் நம்பிக்கையை மதிக்க வேண்டும்.
அனைத்து பண்டிகைகளையும் கொண்டாடுவோம்
ஒரு தாய்க்கும் அனைத்து பிள்ளகளும் ஒன்றுதான். கிறிஸ்துமஸ், ரம்சான், தீபாவளி அனைவருக்கும் விழா தான். வாழ்க்கைக்கு கற்றுக் கொடுக்க பைபிளில் நிறைய கதைகள் இருக்கு. படிக்காதவர்கள் படித்து பாருங்க. மக்களை மானசீகமாக நேசிக்கும் அன்பு, அதிக உழைப்பும் இருந்தால், எப்படிப்பட்ட எதிரிகளையும் வெற்றி கொள்ளலாம்.
குட்டிக் கதை சொன்ன விஜய்
ஒரு இளைஞர் மீது பொறாமைப்பட்டு அவரது சகோதரர்களை பாழும் கிணற்றில் தள்ளி விட்டனர். ஆனால், அந்த இளைஞர் மீண்டு வந்து, நாட்டிற்கே அரசனாக்கி சகோதரர்களின் துரோகத்தை மன்னித்து, அவர்களையும் காப்பாறினார். இதை நாமும் நினைவில் கொள்ள வேண்டும். இவ்வாறு ஜோசப் அரசனான கதையை விஜய் எடுத்துக் கூறினார்.
மதச்சார்பற்ற பாதையில் தவெக
இந்த விழாவில் உங்களுக்கு 100 சதவீதம் உறுதி ஒன்றை அளிக்கிறேன். நானும், எனது தமிழக வெற்றிக் கழகமும் மதச் சார்ப்பற்ற தன்மையை என்றும் உறுதி செய்யும். அந்தப் பாதையில் மட்டுமே பயணிப்போம்.
ஒளி பிறக்கும், நல்லதே நடக்கும்
கண்டிப்பாக விரைவில் ஒரு ஒளி பிறக்கும், நல்லது நடக்கும். அனைத்து புகழுக்கும் இறைவனுக்கே. நம்பிக்கையுடன் இருங்க. நல்லதே நடக்கும் வெற்றி நிச்சயம். என் நெஞ்சில் குடியிருக்கும் உங்கள் அனைவருக்கும், எனது தோழர்கள், தோழிகள் என எல்லோருக்கும் ரொம்ப ரொம்ப நன்றி. நன்றி. நன்றி’ இவ்வாறு தவெக தலைவர் விஜய் உரையாற்றினார்.
===============