Vijay’s Tamilaga Vettri Kazhagam (TVK) has officially begun the candidate selection process for the 2026 Tamil Nadu Assembly Election Source : TVK IT Wing
தமிழ்நாடு

ஜோசப் விஜய் பெயரில் தவெகவினர் மனு : தொண்டர்கள் மகிழ்ச்சி

TVK Application Process for 2026 Election Name of Joseph Vijay : தவெக சார்பில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுபவர்களுக்கான விருப்ப மனு விநியோகம இன்று தொடங்கியது.

Rohini

விண்ணப்பத்தை எப்படி பெறுவது

TVK Application Process for 2026 Election Name of Joseph Vijay : தமிழக வெற்றிக் கழகம் சார்பில் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட விரும்புவோருக்கு இன்று (பிப். 6) முதல் விருப்ப மனு விநியோகம் செய்யப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று அதற்கான விநியோகம் தொடங்கியது .

குவிந்த தொண்டர்கள்

அதன்படி தவெக தலைமை அலுவலகம் அமைந்துள்ள பகுதியான பனையூரில் விருப்ப மனுக்களை கட்சியினர் ஆர்வமுடன் பெற்றுக் கொண்டனர். இந்த விருப்ப மனுக்களை நாளை காலை 10 மணி முதல், மாலை 6 மணி வரை தவெக அலுவலகங்களில் பெற்றுக்கொள்ளலாம் என்று கட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது .

விஜய் பெயரில் முதல் மனு

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் விருப்ப மனுவை அந்தக் கட்சியின் தலைவர் ஜோசப் விஜய் சார்பில் கட்சி நிர்வாகிகள் பெற்றுக் கொண்டனர்.

விருப்ப மனுவிற்கான கட்டணம்

தமிழக வெற்றிக் கழகத்தின் விருப்ப மனுவிற்கான கட்டணமாக ரூ 100 செலுத்தி(TVK Application Fees) பெற்றுக்கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளது . அதன்படி இன்று விருப்ப மனுவை பொதுச் செயலாளர் என். ஆனந்த், தவெக மாநில நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் கே.ஏ. செங்கோட்டையன் உள்ளிட்டோர் ரூ.100 செலுத்தி தங்களது விருப்ப மனுக்களைப் பெற்றுக் கொண்டனர்.

விண்ணப்பத்தில் சிக்கலான கேள்வி

விருப்பமனு படிவத்தில் கட்சி சார்பாக போராட்டம் நடத்தி சிறை சென்றுள்ளீர்களா? என்ற சர்ச்சை கேள்வி இடம்பெற்றிருந்தது. இது தவெக தொண்டர்களிடையே சற்று அதிர்ச்சியை ஏற்படுத்தியது .

பொதுமக்களுக்கும் சிரமம்

விருப்ப மனு விநியோகியத்தால் பனையூர் கட்சி அலுவலகம் சுற்றயுள்ள பகுதிகளில் குடியிருப்புவாசிகளுக்கு சற்று சிரமத்தை உண்டாக்கியது ,குறிப்பாக வீட்டின் முன் வாகனங்களை நிறுத்துவது, கூச்சல் ஆகியவற்றால் சற்று சிரமத்தை சந்தித்தாக குறிப்பிட்டுள்ளனர் .

----