Tamilisai Soundararajan on Sivagangai Lockup Death https://x.com/DrTamilisai4BJP
தமிழ்நாடு

காவல்நிலைய மரணம், மவுனம் எதற்காக? : திமுக மீது தமிழிசை பாய்ச்சல்

Sivagangai Lockup Death : சாத்தான்குளம் வழக்கில் போராட்டம் நடத்திய திமுக, லாக்அப் மரண விவகாரத்தில் மவுனம் காப்பது எதற்காக என்று, தமிழிசை காட்டமாக கேள்வி எழுப்பி உள்ளார்.

Kannan

Sivagangai Lockup Death : சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், ’ காவலாளி அஜித் கொலை செய்யப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. திமுக எதிர்கட்சியாக இருக்கும் பொழுது சாத்தான்குளத்தில் நடந்த கொலைக்கு கனிமொழி இறந்தவரின் வீட்டிற்கு சென்றார். இதை வைத்து பெரிய ஆர்ப்பாட்டங்களை திமுக நடத்தியது.

ஆனால் ஆட்சியில் இருக்கும் திமுக காலத்தில் சிவகங்கை மாவட்டத்தில் லாக்கப் மரனம் நடந்து இருப்பது அதிர்ச்சியாக இருக்கிறது. எதிர்க்கட்சித் தலைவர்கள் என அனைவரும் குரல் எழுப்பிய பிறகுதான், அண்ணன் ஸ்டாலின் அவர்கள் மெதுவாக வெளியே வந்து பதில் கூறுகிறார்.

இதுவரையில் 5 காவலர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்கள் திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சார்ந்தவர்கள் குற்றங்களில் ஈடுபட்டிருந்தால் அது முற்றிலுமாக மூடி மறைக்கப்படுகிறது. முதலமைச்சர் ஸ்டாலின் சட்டம் ஒழுங்கை வைத்துக் கொண்டு என்ன கொண்டிருக்கிறார் எனத் தெரியவில்லை’ இவ்வாறு தமிழிசை கருத்து தெரிவித்தார்.

=====