Temperatures to increase in 4 days across Tamil Nadu : Indian Meteorological Department announcement full report Source : Google
தமிழ்நாடு

4 நாட்களில் அதிகரிக்கிறது வெப்பநிலை : வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

IMD Weather Forecast in Tamil Nadu : தமிழகத்தில் 3ம் தேதி வரை வெப்ப நிலையானது சற்று உயரக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Rohini

4 நாட்களில் அதிகரிக்கிறது வெப்பநிலை

IMD Weather Forecast in Tamil Nadu : கோடை காலம் தொடங்க சில நாட்களே இருக்கும் நிலையில் வெப்பத்தின் தாக்கம் உயர ஆரம்பித்திருக்கிறது . அந்த வகையில் தமிழகத்தில் வருகிற 3ம் தேதிவரை வெப்பநிலையானது உயரக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தொடங்கியது வெப்பத்தின் தாக்கம்

மழைக்காலம், குளிர்காலம் முடிவடைந்த நிலையில் தற்போது கோடைக்காலத்தை தமிழகம் எதிர்கொள்ளவிருக்கிறது .அந்தவகையில் பிப்ரவரி மாதம் முடிவதற்குள்ளாகவே வெப்பநிலையானது உயர்ந்துள்ளது.

வழிகாட்டு நெறிமுறைகள்

வெப்பநிலை அதிகரிப்பால் வெப்பம் சம்மந்தப்பட்ட நோய்கள் வர வாய்ப்பு இருப்பதாக தமிழ்நாடு சுகாதாரத்துறை எச்சரித்திருக்கிறது.

குறிப்பாக தண்னிர் அதிகமாக பருக வேண்டும் , தேவையற்ற வெளிப்புற வெயிலில் இருந்து தன்னை தக்க வைத்து கொள்ளுதல் மேலும் வெயில் சார்ந்த வேலைகளை மேற்கொள்ளும் நபர்களை அதிக கவனமுடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது.

குழந்தைகள் ,முதியர்வகள் வெயிலில் செல்லும் போது கவனமுடன் இருக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

வெப்பநிலை மேலும் உயர வாய்ப்பு

தமிழகத்தில் 3ம் தேதிவரை வெப்பநிலையானது சற்று அதிகமாக உயரக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் தமிழகத்தின் ஒரு சில இடங்களில் வரும் 5ஆம் தேதி வரை மழை பெய்யக்கூடும் எனவும், சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

தென் தமிழ்நாடு, மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் அதையொட்டிய மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.