தேர்தல் வாக்குறுதி, செப் 15 ல் தொடக்கம்
அறிஞர் அண்ணாவில் பிறந்தநாளான்று தாய்மாமன் தங்க மோத்ர திட்டத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கிவைப்பார் என்று தமிழக அரசு அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது
தாய்மாமன் தங்க மோதிர திட்டம், நிதி ஒதுக்கீடு
தமிழக வெற்றி கழகம் ஆட்சி அமைத்தால் , பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தின் கீழ் தங்க மோதிரம் வழங்கப்படும் என்று தேர்தல் அறிக்கையாக அற்வித்திருந்தது ,
இந்த நிலையில் இத்திட்டத்தை மாநிலத்தில் செயல்படுத்துவதற்காக தமிழ்நாடு அரசு ஆண்டுதோறும் ₹755.83 கோடி ரூபாய் நிதியை ஒதுக்கீடு செய்கிறது. இத்திட்டற்கான ஒப்பந்த புள்ளிகள் உடனடியாக கோருவதற்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள்.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது
தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையில், வெற்றித் தமிழகம் ,தமிழநாடு அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. இதில் மிகவும் முக்கியமான திட்டம் "தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்".
அரசு மருத்துவமனைகளில் பிரசவிக்கும் ஒவ்வொரு குழந்தையையும், மற்றும் பிரசவித்த தாயையும் கௌரவிக்கும் முகமாக "தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்" வடிவமைக்கப்பட்டு இன்று, இத்திட்டத்தை நடைமுறைப்படுத்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
1 கிராம் மோதிரம், தாய்மையின் வளர்ச்சியை செயல்படுத்துவதே திட்டத்தின் நோக்கம்
அரசு மருத்துவமனைகளில் பிரசவிக்கும், தமிழ்நாட்டில் நிரந்தரமாக வசிக்கும் குடும்பங்களை சார்ந்த தாய்மார்களின் குழந்தைகளுக்கு தமிழ்நாடு முதலமைச்சர், தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தின் கீழ் ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கப்படும்.
தமிழ்நாடு அரசின் சுகாதாரச் சேவைகளில் மக்களின் நம்பிக்கையை வலுப்படுத்தும் நோக்கிலும்,
அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தையின் பிறப்பை நினைவு கூறும் வகையிலும், தாய்மையின் மகிழ்ச்சி மற்றும் முக்கியத்துவத்தை கொண்டாடும் வகையிலும் தாய்மாமன் தங்க மோதிரத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
இத்திட்டத்தை மாநிலத்தில் செயல்படுத்துவதற்காக தமிழ்நாடு அரசு ஆண்டுதோறும் ரூ. 755.83 கோடி நிதியை ஒதுக்கீடு செய்கிறது என்றும் அரசு அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது
இத்திட்டற்கான ஒப்பந்த புள்ளிகள் உடனடியாக கோருவதற்கு தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்கள்.
யாருக்கு இந்த திட்டம் பொருந்தும்
தவெக அரசு அறிவித்துள்ள தாய்மாமன் தங்க மோதிர திட்டமானது , தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் பிரசவிக்கும், தமிழ்நாட்டில் நிரந்தரமாக வசிக்கும் குடும்பங்களை சார்ந்த தாய்மார்களின் குழந்தைகளுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின், தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தின் கீழ் ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கப்படும்.