Thank you to everyone who inquired about my well-being. Vanathi Srinivasan recorded a video from the hospital! google
தமிழ்நாடு

ஓரிரு நாளில் நேரில் வருகிறேன், நலம் விசாரித்த அனைவருக்கும் நன்றி மருத்துவமனையில் இருந்தபடி வானதி வீடியோ பதிவு !

BJP Vanathi Srinivasan : உடல் நல குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் , இன்று வீடியோ வெளியிட்டுள்ளார்.

Rohini

கோவை வடக்கு தொகுதி வேட்பளர்

BJP MLA Vanathi Srinivasan Health Condition : வருகிற சட்டமன்ற தேர்தலில் கோவை மாவட்ட வடக்கு தொகுதி வேட்பாளராக வானதி சீனிவாசன் போட்டியிடுகிறர் , இந்த நிலையில் இவர் உடல் நல குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் , வீடியோ மூலம் இன்று காணொளி வெளியிட்டுள்ளார்

நன்றி தெரிவித்து வீடியோ வெளியீடு

உங்கள் அன்பான வாழ்த்துகளுக்கும், எனக்காக இறைவனிடம் மனமுருக வேண்டிக் கொண்டதற்கும் மனமார்ந்த நன்றி. இந்த தருணத்தில் என்னுடன் நின்ற அனைத்து அண்ணன்களுக்கும், அக்காக்களுக்கும், தம்பி தங்கைகளுக்கும் உங்கள் ஒவ்வொருவரின் உழைப்பும் என் மனதில் பதிந்திருக்கிறது என்று காணொளியில் குறிப்பிட்டு வெளியிட்டுள்ளார்

பாஜகவின் பூத் கமிட்டி கூட்டம் : வானதி காணொளி மூலம் பதிவு

இன்று மாலை 4 மணிக்கு பிரதமர் மோடி பாஜகவின் பூத் பிரதிநிதிகளுடன் உரையாட இருக்கிறார். எனது பூத் வலிமையான பூத் என்கிற கலந்துரையாடலில் நாம் அனைவரும் 'நமோ ஆஃப்' மூலம் இணைந்து இந்த நிகழ்வை வெற்றிகரமாக மாற்ற வேண்டும்.

தமிழகத்தின் மீது அளப்பரிய அன்பும், தமிழகத்தின் ஆற்றல் மீது அசைக்க முடியாத நம்பிக்கையும் வைத்துள்ள பிரதமர் மோடிக்கு, தமிழகத்தில் என்டிஏ கூட்டணியின் வெற்றி மூலம் அன்பினை தெரிவிக்க வேண்டும். நாம் அனைவரும் பிரதமர் மோடி பேசுவதை கேட்க காத்திருப்போம்” என்று அவர் கூறினார்.

==========