'Thayumanavar' scheme to be expanded to include those aged 60; TVK government discusses budget proposals AI GENERATED
தமிழ்நாடு

60 வயது முதலே தாயுமானவர் திட்டம் விரிவாக்கம் : தவெக அரசின் பட்ஜெட் ஆலோசனை: விரைவில் அறிவிப்பு!

முதல்வர் விஜய் தலைமையில் நடந்த ஆலோசனையில் 'தாயுமானவர்' ரேஷன் விநியோகத் திட்டத்தை 60 வயதினருக்கும், கைம்பெண்களுக்கும் விரிவுபடுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

Kavitha prasanna

'Thayumanavar' scheme to be expanded to include those aged 60; TVK government discusses budget proposals—announcement expected soon!

தமிழகத்தில் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள தவெக அரசின் 2026-27ஆம் நிதியாண்டிற்கான முதல் வரவு செலவுத் திட்டம் இந்த மாத இறுதியில் தாக்கல் செய்யப்பட உள்ளது.

புதிய திட்டங்கள் உருவாக்கல், விரிவாக்க பணிகள் குறித்து ஆலோசனை

இதையொட்டி, புதிய திட்டங்களை உருவாக்குவது மற்றும் தற்போதைய திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து முதல்வர் விஜய் தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் துறை ரீதியான ஆலோசனைக் கூட்டங்கள் கடந்த சில நாட்களாக நடைபெற்று வருகின்றன.

ஆலோசனைக் கூட்டத்தில் எடுக்கப்படும் முக்கிய முடிவுகள்

முதல் நாளில் கூட்டுறவு மற்றும் உணவுத் துறைகள் குறித்து விவாதிக்கப்பட்ட நிலையில், இரண்டாம் நாளில் ஊரக வளர்ச்சி மற்றும் நெடுஞ்சாலைத் துறைகள் சார்ந்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

அமைச்சர்கள், உயர் அதிகாரிகள் பங்கேற்பு

இக்கூட்டத்தில் அமைச்சர்கள் என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, மரிய வில்சன் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்துகொண்டு, குறுகிய மற்றும் நீண்ட காலத் திட்டங்கள் குறித்து ஆலோசித்தனர். இத்தகைய ஆலோசனைக் கூட்டங்கள் வரும் ஜூலை 22ஆம் தேதி வரை தொடரவுள்ளன.

தாயுமானவர் திட்டம் விரிவாக்கம்?

இந்த ஆய்வுக் கூட்டத்தின் முக்கிய முடிவாக, முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் வீடுகளுக்கே நேரடியாகச் சென்று ரேஷன் பொருட்களை வழங்கும் ‘தாயுமானவர்’ திட்டத்தை மேலும் விரிவுபடுத்த அரசு திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

60 வயது முதலே தாயுமானவர் திட்டம் : முதல்வர் ஆலோசனை

கடந்த திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட இத்திட்டத்தின் மூலம் தற்போது 70 வயதுக்கு மேற்பட்ட சுமார் 20 லட்சம் பேர் பயனடைந்து வருகின்றனர்.

தற்போது, முதல்வர் விஜய்யின் அறிவுறுத்தலின்படி, இத்திட்டத்தின் தகுதி வரம்பை 60 வயதாகக் குறைக்கவும், அத்துடன் கைம்பெண்களையும் இதில் இணைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரவிருக்கும் பட்ஜெட்டில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

======