தமிழகத்தின் தொழில் வளர்ச்சிக்கு : மத்திய அரசு தான் காரணம்
Annamalai criticized DMK : தமிழகத்தின் தொழில் வளர்ச்சிக்கு மத்திய அரசுதான் காரணம் இதனை அமைச்சர் டிஆர்பி ராஜாவால் மறுக்க முடியுமா என்ற கேள்வியை பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது
இது குறித்து அவர் கூறியதாவது மதுரையில் தற்போது இரண்டு அமைச்சர்கள் இருக்கிறார்கள். அமைச்சர்கள் மூர்த்தியும், பிடிஆர் தியாகராஜனும் மக்கள் மத்தியில் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். மதுரை மெட்ரோ ரயில் திட்டம் குறித்து இருவரும் பொய்ப் பிரச்சாரம் செய்து வருவதாக அமைச்சர்களை குறிப்பிட்டு பேசியுள்ளார்
மத்திய அரசு அனுப்பிய பதில் கடிதத்தை மக்களிடம் காட்டுங்கள்
மதுரை மற்றும் கோவைக்கு மெட்ரோ ரயில் திட்டம் தேவை என்பது மக்களின் விருப்பம். இவை இரண்டும் மிகப்பெரிய தொழில் வளர்ச்சி மற்றும் அதிக மக்கள் தொகை வளர்ச்சி இருக்கக் கூடிய நகரங்கள். ஆனால் மாநில அரசு தவறான அறிக்கையையே அனுப்பியிருக்கிறது
மத்திய அரசு அனுப்பிய பதில் கடிதத்தையும் தமிழ்நாட்டு மக்களிடம் காட்டுங்கள் என்றும் தெரிவித்துள்ளார்.
சந்தையிலையே விலை போகாதது திராவிட மாடல்
அமைச்சர் பிடிஆர், எங்கள் கூட்டணி வேட்பாளர் சுந்தர்.சி-யை பார்த்து ‘வெளியூர் ஆள்’ எனக் குறிப்பிடுகிறார். இவருமே அமெரிக்காவில் தான் படித்தார். அங்கேயே தான் சுற்றித்திரிந்தார்.
இப்போது மாற்றி முன்னுக்கு பின் முரணாக பேசி வருகிறார். உள்ளூர் சந்தையிலேயே விலை போகாது திராவிட மாடல் அரசு, இதை வெளியூர் சந்தையில் யாரை வாங்கப் போகிறார்கள். என்று அமைச்சர் பிடிஆர் யை சாடினார்
திமுக அமைச்சர்கள் வாய் உள்ளதால் பிழைத்து கொள்கிறார்கள்
தமிழ்நாட்டின் தொழில்துறை வளர்ச்சிக்கு மத்திய அரசுதான் காரணம். இதனை அமைச்சர் டிஆர்பி ராஜாவை இல்லை என்று சொல்லச் சொல்லுங்கள் பார்ப்போம். திமுக அமைச்சர்கள் வாய் உள்ளதால் பிழைத்துக் கொள்கிறார்கள். திமுகவுக்கு எதிரான வாக்கும், நமக்கான வாக்கும் நமக்கு வேண்டும் துன்று பரப்புரை பிரச்சாரத்தினுள் தெரிவித்தார்.
முதல்வருக்கு ஐபில் பார்ப்பதுதான் வேலையா
அதிமுக தலைமையிலான என்டிஏ கூட்டணியினர் தேர்தல் பணிகளுக்காக மிகக்கடுமையாக உழைத்து கொண்டிருக்கிறார்கள். பெரிய அலை இப்போதுதான் உருவாக ஆரம்பித்துள்ளது.
இமாலய வெற்றியை நோக்கி என்டிஏ நகர்ந்து கொண்டிருக்கிறது. முதல்வருக்கு ஐபிஎல் பார்ப்பது தான் வேலையா? தமிழகத்தில் எத்தனை வேலை நடந்து கொண்டிருக்கிறது என்று கேள்வி எழுப்பியுள்ளார்
ஜனநாயகன் லீக் ; உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்
ஜனநாயகன்’ திரைப்படம் என்பது நிறைய பேரின் உழைப்பு, வியர்வை, ரத்தம். தற்போது அது லீக் ஆகிவிட்டது. இந்த நேரத்தில் இப்படி நடந்திருகக்கக் கூடாது. இது தவறு. எங்கிருந்து லீக் ஆனது என்பதை கண்டுபிடித்து அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்