The Meteorological Department has forecast heavy rain today in three districts, including Chennai source:thamizhalai,ai generated
தமிழ்நாடு

”வெளுக்கப் போகும் மழை” : சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டைக்கு எச்சரிக்கை : மேற்கு தொடர்ச்சி பகுதிகளிலும் பலத்த மழை..!

சென்னை உள்ளிட்ட 3 மாவட்டங்களில் இன்று மழை வெளுக்கும் என்று, வானிலை மையம் கணித்துள்ளது.

Kannan

The Meteorological Department has forecast heavy rain today in three districts, including Chennai

தமிழகத்தில் கொளுத்தும் வெயில்

தமிழகத்தில் முன் எப்போதும் இல்லாத வகையில் செப்டம்பர் மாதத்தில் வெயில் கொளுத்தி எடுக்கிறது. மே மாதம் வந்து விட்டதோ என்று சொல்லும் அளவுக்கு வெயில் விளாசுகிறது. நெல்லை, தென்காசி மாவட்டங்களிலும் வெயில் வாட்டி வதைக்கிறது.

3 மாவட்டங்களில் பலத்த மழை

இந்த நிலையில் தமிழகத்தில் இன்றும் நாளையும் சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டியுள்ள இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

சென்னை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இன்றும் நாளையும் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

உள்தமிழகத்தில் வெப்பம் அதிகரிக்கும்

வெப்பநிலையை பொறுத்தவரை உள் தமிழகத்தில் வழக்கத்தை விட 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்க கூடும் என கூறப்பட்டுள்ளது.

சில நாட்களுக்கு வெப்பத்தின் தாக்கம் கொஞ்சம் கடுமையாக இருக்கும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

=========