The Tamil Nadu tvk Party candidate secured victory by a margin of 1 vote.  google
தமிழ்நாடு

1 வாக்கு வித்தியாசம், வெற்றியை வசப்படுத்திய தவெக வேட்பாளர்! : அமைச்சர் பெரியகருப்பனை தோற்கடித்த சீனிவாச சேதுபதி...

தவெக வேட்பாளர் சீனிவாச சேதுபதி அமைச்சர் பெரியகருப்பனை விட ஒரு வாக்கு கூடுதலாக பெற்று தேர்தலில் வெற்றி பெற்று வெற்றியை தன் வசப்படுத்தியிருக்கிறார்

Rohini

தேர்தல் முடிவுகள் 2026

தமிழக தேர்தலில் 108 இடங்களை கைப்பற்றி, தமிழக வெற்றி கழகம் புதிய வெற்றி சந்தித்துள்ளது. பெரும்பான்மைியான தொகுதிகளில் தமிழக வெற்றி கழகம் வெற்றி பெற்றுள்ளது.

மைல்கல்லை எட்டிய தமிழக வெற்றி கழகம்

தேர்தலில் போட்டியிட்ட முதல் முறையே தமிழக வெற்றி கழகம் அதிகமான தொகுதிகளை கைப்பற்றி உள்ளது. 108 தொகுதிகளை கைப்பற்றி அபார வெற்றியை பதிவுசெய்துள்ளது.

பல்வேறு தொகுதிகளிலும் தமிழக வெற்றி கழகத்தின் வேட்பாளர்கள் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வாகை சூடி இருக்கிறார்கள்.

1 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தொகுதியில் போட்டியிட்ட திமுக அமைச்சர் பெரிய கருப்பன், வெறும் ஒரு வாக்கு வித்தியாசத்தில் தமிழக வெற்றி கழக வேட்பாளரிடம் தோல்வியை தழுவி இருக்கிறார்.

சீனிவாச சேதுபதி வெற்றி

தவெக வேட்பாளர் சீனிவாச சேதுபதி அமைச்சர் பெரியகருப்பனை விட ஒரு வாக்கு கூடுதலாக பெற்று தேர்தலில் வெற்றியை பதிவு செய்துள்ளார்.

இருதொகுதிகளிக்கும் வெற்றி பெற்ற விஜய்

சட்டமன்ற தேர்தலில் இரண்டு தொகுதிகளிலும் போட்ட்டியிட்டிருந்த விஜய் , பெரம்பூர் மற்றும் த்ரிச்ய கிழக்கு ஆகிய தொகுதிகளில் போட்டியிட்டிருந்தார். இரண்டு தொகுதிகளிலும் அவர் வெற்றி பெற்றுள்ளார்.

இதில் திருச்சி கிழக்கு தொகுதியில் தனது பதவியை ராஜினாமா செய்வர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஒரே குடும்பத்தில் மூவர் வெற்றி

தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் வெற்றி பெற்றுள்ளனர். பிரபல லாட்டரி அதிபரான மார்ட்டின் மகன், ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் புதுச்சேரியில் லட்சிய ஜனநாயக கட்சி என்ற கட்சியை தொடங்கி இந்த தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார் ,

அதைப்போல , மார்டினின் மனைவி லீமா ரோஸ் அதிமுக சார்பில் லால்குடி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருக்கிறார்.

இவரது மருமகன் ஆதவ் அர்ஜூனா தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் வில்லிவாக்கம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றியை பதிவு செய்திருக்கிறார். இதன் மூலம் ஒரேகுடும்பத்தில் மூவர் வெற்றியை பதிவு செய்திருக்கிறார்.

===============