Theft of power sector hard disks: No one can escape, says Electricity Minister Nirmal Kumar  google
தமிழ்நாடு

மின் துறை சார்ந்த" ஹார்டு டிஸ்குகள் திருட்டு" : யாரும் தப்பிக்க முடியாது மின்சாரத்துறை அமைச்சர் நிர்மல்குமார்

மின் துறை அலுவலகத்தில் ஹார்டு டிஸ்குகள் திருட்டுப்போன விவகாரம் குறித்து விளக்கம் அளித்துள்ளார் அமைச்சர்

Rohini

ஹார்டு டிஸ்குகள் திருடுப்போன விவகார பின்னணி

சென்னை அண்ணாசாலையில் இயங்கி வரும் மின்வாரிய தலைமை அலுவலகத்தில் முக்கிய ஆவணங்கள் அடங்கிய ஹார்டு டிஸ்குகள் திருடுபோனது ,

அந்தக் கோப்புகளில் நிலக்கரி வாங்கியது, டெண்டர்கள், மின்மாற்றிகள் கொள்முதல் தொடர்பான தரவுகள் இருக்கலாம் என்றும், சுமார் 18 ஹார்டு டிஸ்க்குகள் மாயமானதாகவும் அந்தப் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோப்புகளில் காகிதத்தின் அடிப்படையிலான நகல்கள் அனைத்தும் பாதுகாப்பாக இருந்தாலும், அனைத்து முக்கியமான மின்னணு ஆவணங்கள் மட்டும் திருடப்பட்டுள்ளன.

இந்த திருட்டு குறித்து மின்சார துறை அமைச்சர் தெரிவித்துள்ளதாவது

திருட்டி விவகாரம் தொடர்பாக பேசிய அமைச்சர் ,இதுதொடர்பான விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது. எதனால் திருடப்பட்டன. அவர்களின் நோக்கம் என்ன? இதன் பின்னணியில் இருப்பவர்கள் யார் என முழுமையான விசாரணைக்கு உத்தரவிட்டுள்தாகவும் தெரிவித்துள்ளார்

மேலும்கடந்த மாதம் சிலரை பணியிடை நீக்கம் செய்தோம், அதன்பிறகு இது நடந்ததா என சந்தேகம் வருகிறது. இந்த விவகாரத்தில் யாரும் தப்பிக்க முடியாது என்றும் தெரிவித்துள்ளார்

விசாரணையில் இருக்கும் போது எதுவும் பேச இயலாது :அமைச்சர்

, "பல ஹார்ட் டிஸ்க்குகள் மாயமானதாக கடந்த மாதம் புகார்கள் கிடைத்திருக்கின்றன. இந்தச் சம்பவத்தில் சிலர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் இதுதொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடபெற்று வருவதாகவும் ,

விசாரணையில் இருக்கும் போது எதுவும் பேசமுடியாது. காணாமல்போன ஹார்ட் டிஸ்க்குகள் குறித்து ஆய்வு செய்ய கூறியிருக்கிறோம். கணினிகளில் இருக்கும் தரவுகளை பேக்-அப் எடுத்து வைக்க உத்தரவிட்டிருக்கிறோம். என்று அமைச்சர் தெரிவித்தார்

முக்கிய கோப்புகளை பாதுகாக்க அறிவுறித்தியுள்ளோம் : அமைச்சர்

இது குறித்து பேசிய அமைச்சர் ,அதிகளவிலான ஒப்பந்த ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். ஒப்பந்த ஊழியர் விவரங்கள், நிலக்கரி இறக்குமதி தொடர்பான தரவுகள் திருடப்பட்டுள்ளன.

ஏற்கனவே மின்மாற்றி வாங்கியதில் ஊழல் கண்டறியப்பட்டு, இந்த விவகாரம் குறித்த தகவல்கள் சிபிஐயிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. அதன்பின்னர்தான் ஹார்ட் டிஸ்க்குகள் திருடப்பட்டுள்ளன என்று விளக்கம் அளித்தார்

மேலும் மின் வெட்டு பிரச்சனையை சரிசெய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

================