Theni District Jail Prisoners Escape Suspension Order CM Vijay source:google
தமிழ்நாடு

தேனி மாவட்ட சிறையில் கைதிகள் தப்பிய சம்பவம் : பொறுப்பு சிறைக் கண்காணிப்பாளர் பணியிடை நீக்கம், முதலமைச்சர் விஜய் அதிரடி!

தேனி சிறையில் கைதிகள் தப்பிய சம்பவத்தில் பொறுப்புச் சிறைக் கண்காணிப்பாளர் பணியிடை நீக்கம் செய்து முதலமைச்சர் விஜய் உத்தரவு.

Kavitha prasanna

Theni District Jail Prisoners Escape Suspension Order CM Vijay

சம்பவத்தின் பின்னணி

தேனி மாவட்ட சிறையில் கடந்த 26.10.2026 அன்று இரவு அடைக்கப்பட்டிருந்த 17 கைதிகள், பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த சிறைக் காவலர்களைத் தாக்கிவிட்டு சிறையிலிருந்து தப்பிச் சென்றனர்.

தகவலறிந்த காவல் துறையினர் துரிதமாக செயல்பட்டு, தப்பிச் சென்ற 17 கைதிகளையும் மீண்டும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

பாதுகாப்பு குறைபாடு மற்றும் முதல்வர் நடவடிக்கை

இச்சம்பவத்தைத் தொடர்ந்து, சிறை நிர்வாகத்தில் ஏற்பட்ட பாதுகாப்பு குறைபாடுகள், கண்காணிப்புப் பணிகளில் நிலவிய மெத்தனப்போக்கு மற்றும் பணியில் ஏற்பட்ட கவனக்குறைவு ஆகியவற்றுக்காகப் பொறுப்பு சிறைக் கண்காணிப்பாளரைப் பணியிடை நீக்கம் செய்யவும், அலுவலர்களைப் பணியிட மாற்றம் செய்யவும் முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.

பொறுப்பு சிறைக் கண்காணிப்பாளர் பணியிடை நீக்கம்

தேனி மாவட்ட சிறையில் 6.8.2024 முதல் சிறைக் கண்காணிப்பாளர் பொறுப்பை கூடுதலாக கவனித்து வந்த துணை சிறை அலுவலர்

ந. நாகேஸ்வரன், சிறைக் கைதிகள் மற்றும் பணியாளர்கள் மீதான கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாட்டுப் பணிகளில் உரிய கவனம் செலுத்தத் தவறியதற்காக, தமிழ்நாடு குடிமைப் பணிகள் (ஒழுங்கு மற்றும் மேல்முறையீடு) விதிகளின்படி 30.10.2026 முதல் மறு உத்தரவு வரும் வரை பணியிடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளார்.

சிறைக் கண்காணிப்பாளர் பணியிட மாற்றம்

தொடர்ந்து சிறை நிர்வாகத்தில் கண்காணிப்பு, பொறுப்புடைமை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்தும் வகையில், மதுரை மத்தியச் சிறைக் கண்காணிப்பாளர் ஆர். கிருஷ்ணராஜ், சேலம் மத்தியச் சிறைக் கண்காணிப்பாளராகப் பணியிட மாற்றம் செய்யப்பட்டு உள்ளார்.

அதிகாரிகளுக்கு எச்சரிக்கை

சிறைகளில் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்புப் பணிகளில் எவ்விதத் தொய்வும் ஏற்படாத வகையிலும், சிறைத் துறை அலுவலர்கள் தங்களது பொறுப்புகளை முழு கவனத்துடனும் விழிப்புணர்வுடனும் மேற்கொள்ள வேண்டும் என்றும், தொடர்ந்து பணியில் மெத்தனமாகவோ கவனக்குறைவாகவோ செயல்படும் அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் இன்று ( 31-10-2026) வெளியிடப்பட்டுள்ள உத்தரவில் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

=============