Thenpennai River water sharing issue conflict between Tamil Nadu and Karnataka Build Dam issue in Tamil Source : Thenpennai River Dam
தமிழ்நாடு

தென்பெண்ணை ஆறு நதி பகிர்வு பிரச்னை -விரைவில் தீர்ப்பாயம்

Thenpennai River water sharing issue : தமிழகம் vs கர்நாடகா பிரச்னைக்கு தென்பெண்ணை துணை நதி ஒன்றில் கர்நாடகா அணை கட்டியதே இதற்கு காரணம்.

Rohini

காவிரி போல தென்பெண்ணை

Thenpennai River water sharing issue : தமிழ்நாட்டிற்கும் கர்நாடகா மாநிலத்திற்கும் காவிரியைப் போலவே தென்பெண்ணை நதி நீரைப் பகிர்வதிலும் பிரச்னை இருந்து வருகின்றது . தென்பெண்ணை துணை நதி ஒன்றில் கர்நாடகா அணை கட்டியதே இதற்குக் காரணமாகும்.

நதிநீர் பங்கீட்டில் மோதல்

தமிழ்நாட்டிற்கும் கர்நாடகாவுக்கும் இடையே காவிரி நதி நீர்ப் பங்கீட்டு விவகாரத்தில் பல ஆண்டுகளாகவே மோதல் இருந்து வருவது நாம் அனைவரும் தெரிந்த ஒன்றே . இந்த விவகாரத்தில் ஏற்கனவே தீர்ப்பாயம் அமைக்கப்பட்டுள்ளத என்பதும் குறிப்பிடத்தக்கது .

தென்பெண்ணை எங்கு உருவாகிறது

தென்பெண்ணை ஆறு கர்நாடக மாநிலத்தின் சிக்கபள்ளாப்பூர் (Chikkaballapur) மாவட்டத்தில் உள்ள நந்தி மலைத் தொடரின் அமைந்துள்ள சென்னகேசவா மலை (Chenna Kesava hills) உற்பத்தியாகிறது.

முதலில் நந்தி மலையில் உற்பத்தியாகும் இந்த ஆறு கர்நாடகாவில் 112 கிமீ பாய்கிறது. பிறகு அது கிருஷ்ணகிரி மாவட்டம் வழியாகத் தமிழகத்தில் நுழைகிறது. பின்னர் தருமபுரி, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மாவட்டங்கள் வழியாக பாய்கிறது.

தமிழகத்தில் தென்பெண்ணை ஆறு

தமிழகத்தில் மட்டும் இந்த நதி மொத்தம் 318 கிமீ தூரம் பாய்கிறது. இறுதியாக கடலூரில் தென்பெண்ணை ஆறு அருகே வங்காள விரிகுடாவில் கலக்கிறது.

தமிழகத்தின் வாழ்வாதாரம்

தமிழ்நாட்டின் வட மாவட்டங்களான கிருஷ்ணகிரி மற்றும் திருவண்ணாமலையில் உள்ள பல லட்சம் ஏக்கர் விவசாய நிலங்களுக்கு இந்த ஆறுதான் முக்கிய வாழ்வாதாரமாக இருக்கிறது.

கிருஷ்ணகிரி அணை, சாத்தனூர் அணை

குறிப்பாக இந்த ஆற்றின் குறுக்கேதான் கிருஷ்ணகிரி அணை மற்றும் சாத்தனூர் அணை ஆகியவை கட்டப்பட்டுள்ளன. கிளை நதிகளான சினையாறு, பாம்பாறு மற்றும் மார்க்கண்டேய நதி ஆகியவையும் இதில் முக்கிய பங்கு வகிக்கின்றன .பாம்பாறு, வன்னியாறு, கல்லாறு, கெடிலம் ஆகியவை இதன் முக்கிய துணை ஆறுகளாகும்.

கிருஷ்ணகிரி மற்றும் தருமபுரி மாவட்டங்களில் இதன் பங்களிப்பு அதிகமாக இருக்கிறது. குறிப்பாக தமிழகத்தின் முக்கிய நீர் ஆதாரமாக தென்பெண்ணை விளங்குகிறது.

சிக்கல் என்ன ?

1892ல் போடப்பட்ட ஒப்பந்தப்படி, தமிழகத்தின் அனுமதியின்றி மாநிலமான கர்நாடகா புதிய அணைகளையோ அல்லது நீரைத் திசைதிருப்பும் கட்டுமானங்களையோ கட்டக்கூடாது. 1892 ஒப்பந்தம் இதை மிகத் தெளிவாகக் கூறுகிறது.

அணை கட்டிய கர்நாடகம்

இந்த ஒப்பந்தத்தை மீறி மார்க்கண்டேய நதியில் கர்நாடக அரசு அணையைக் கட்டியுள்ளது. இது தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் என்பது தமிழகத்தின் வாதமாக இருக்கிறது.

தென் பெண்ணையாற்றின் துணை நதியான மார்க்கண்டேய நதியின் குறுக்கே கர்நாடகா அரசு அணை கட்டியதே இரு மாநிலங்களுக்கும் இடையே நதி நீர் சிக்கலுக்குப் பிரதானக் காரணமாகும்.

உச்ச நீதிமன்றம் உத்தரவு

தமிழ்நாட்டிற்கும் கர்நாடகாவுக்கும் இடையே காவிரி நதி நீர்ப் பங்கீட்டு விவகாரத்தில் பல ஆண்டுகளாகவே மோதல் இருந்து வந்த நிலையில்

கடந்த 2018ல் தமிழ்நாடு இது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது.

தீர்ப்பாயம் அமைக்க உத்தரவு

இதனால் காவிரி விவகாரத்தைப் போலவே, தென்பெண்ணை நதியின் பிரச்சினையை தனியாக ஒரு 'நதிநீர் தீர்ப்பாயம்' (River Water Tribunal) அமைத்து பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வர என்று தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் கோரிக்கை முன்வைத்து. அந்த கோரிக்கையயை பரிசீலித்து தீர்ப்பாயம் அமைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

===================