Thirumavalavan alleged 'SIR' factor reason for Stalin's defeat in the Kolathur constituency source:thamizhalai,ai generated
தமிழ்நாடு

”கொளத்தூரில் ஸ்டாலின் தோற்க SIR காரணம்” : திருமாவளவன் குற்றச்சாட்டு, தேர்தல் ஆணையம் மீது விமர்சனம்..!

கொளத்தூர் தொகுதியில் திமுக தலைவர் ஸ்டாலின் தோற்க எஸ்ஐஆர் காரணம் என்ற குற்றச்சாட்டை முன்வைத்து இருக்கிறார் திருமாவளவன்.

Kannan

Thirumavalavan has alleged that the 'SIR' factor was the reason for DMK leader Stalin's defeat in the Kolathur constituency.

தலைமை தேர்தல் ஆணையருக்கு எதிராக போராட்டங்கள்

எஸ்ஐஆர் விவகாரத்தில் தலைமை தேர்தல் ஆணையம் பதவி விலகணும்ன்னு, காங்கிரஸ் உள்ளிட்ட இண்டியா கூட்டணி கட்சிகள் ஒத்த காலில் நின்னு, தொடர் போராட்டங்களை நடத்திக் கிட்டு வர்றாங்க.

சென்னையில் இண்டியா கூட்டணி ஆர்ப்பாட்டம்

டெல்லியை தொடர்ந்து, மாநில தலைநகரங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டு வருது. அந்தவகையில சென்னையில் இண்டியா கூட்டணி சார்பா ஞானேஷ்குமாருக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இதில் கலந்து கொண்டு பேசிய திருமாவளவன், ”பாஜக தனது அரசியல் எதிரிகளைச் சொல்லி வைத்தாற் போல் காலி செய்து வருது.

கொளத்தூரில் ஸ்டாலின் தோற்கடிப்பு

அந்த வகையில் தந்திரமாக மு.க.ஸ்டாலின் குறிவைத்து தோற்கடிக்கப்பட்டுள்ளார். மு.க.ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்டால் தோற்கடிக்கப்பட வாய்ப்புள்ளது என்பதை அறிந்து, அவரை வேறு தொகுதிக்கு மாறி நிற்குமாறு அப்போதே தெரிவித்தேன்.

கொளத்தூரில் 1 லட்சம் வாக்குகள் நீக்கம்

ஸ்டாலின் போட்டியிட்ட கொளத்தூர் தொகுதியில் 1 லட்சம் வாக்குகள் நீக்கப்பட்டன. அதை அப்போதே அவரது கவனத்திற்கு கொண்டு சென்றேன். ஏதோ சதி நடக்க இருக்குன்னு யூகித்தேன், அப்படின்னு திருமாவளவன் தெரிவித்தார்.

4 முதல்வர்கள் தோற்கடிக்கப்பட்டார்கள்

அரவிந்த் கெஜ்ரிவால், மம்தா பானர்ஜி, பினராயி விஜயன் வரிசையில் ஸ்டாலினும் தோல்வி அடைந்தார். நான்கு பேரும் தோற்கடிக்கப்பட்டார்கள் என்பதே உண்மை.

தென்னிந்தியாவில் பாஜக தனது கைவரிசையை காட்ட முடியவில்லை. 10 தொகுதிகளில் அவர்கள் வெற்று பெற்றார்கள் என்று சொன்னால் யாரும் நம்ப மாட்டாங்க.

தமிழகத்தையும், கேரளத்தையும் அசைத்து பார்க்க முடியாது என்பதால், அரசியல் எதிரிகளை சொல்லி வைத்தார் போல காலி செய்திருக்கிறார்கள் என்றும் திருமாவளவன் குற்றம்சாட்டினார்.

தவெக கூட்டணியில் இடம்பெற்று அமைச்சரவையில் பங்கு வகித்தாலும், தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகளுக்கு எதிராகவும், மு.க.ஸ்டாலினுக்கு ஆதரவாகவும் திருமாவளவன் பேசி இருப்பது தமிழக அரசியலில் முக்கியமானதா பார்க்கப்படுது.

=============