Thirumavalavan gave his support: TVK leader Vijay becomes the Chief Minister!: IUML supported; got 120 seats  Google
தமிழ்நாடு

ஆதரவு கொடுத்தார் திருமாவளவன் : முதல்வராகிறார் தவெக தலைவர் விஜய்! : IUML ஆதரவுl; கிடைத்தது 120 இடங்கள்

தவெக ஆட்சி அமைக்க விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆதரவு அளிப்பதாக அறிவித்து இருப்பதால், முதலமைச்சராக பொறுப்பேற்கிறார் விஜய்.

Rohini

ஒருவழியாக முடிவு

சட்டசபை தேர்தலில் 108 இடங்களில் வெற்றி பெற்றாலும், ஆட்சி அமைக்க முடியாமல் தமிழக வெற்றிக் கழகம் தவித்தது. முடிவுகள் வெளியாகி 6 நாட்கள் ஆன போதும், ஒரு முடிவுக்கு வர முடியாமல் முட்டுக்கட்டை நீடித்தது.

உற்று நோக்கப்படும் திருமா

திருமா ஆதரித்து விட்டால், விஜய் ஆட்சிக் கட்டிலில் ஏறுவது உறுதியாகி விடும். எனவே தான், திருமாவளவனின் அறிவிப்பு என்பது தமிழக அரசியலில் மிகவும் முக்கியமானதாக பார்க்கப்பட்டது.

திருமாவளவன் ஆதரவு அளிக்க மறுத்து விட்டால், தமிழகம் ஜனாதிபதி ஆட்சியை நோக்கி நகரும் சூழலும் உருவானது.

அதரவளித்த விசிக

தவெக ஆட்சி அமைக்க 120 பெரும்பான்மையான் இடங்க்ள் தேவைப்பட்ட நிலையில் இன்று விசிக தலைவர் திருமாவளவன் நிபந்தனையற்ற அதரவை வழங்கியுள்ளது . அதற்கான கடித்ததை ஆதவ் அர்ஜுனாவிடம் வழங்கினார்.திருமாவளவன் ஆதரவு அளித்தால் மட்டுமே விஜயால் ஆட்சி அமைக்க முடியும்

என்ற சூழல் இருந்த நிலையில் ,ஆதரவளித்துள்ளது விசிக

ஆதரவளித்த ஐயூஎம்எல்

116 இடங்கள் கிடைத்து விட்ட நிலையில், இன்னும் இரண்டே இடங்கள் தான் தேவை. திமுக கூட்டணியில் உள்ள இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆதரவு அளிக்க முடியாது என்று கூறி வந்த நிலையில் இன்று ஐயூஎம்எல் ஆதரவை வழங்கியுள்ளது

காங்கிரஸ், கம்யூனிஸ்டுகள் ஆதரவு

ஆட்சி அமைக்க 118 இடங்கள் தேவை என்ற நிலையில், தவெகவிற்கு காங்கிரஸ் கை கொடுக்க 5 இடங்கள் கிடைத்தது. இரண்டு கம்யூனிஸ்டுகளும் தலா 2 சீட்களுடன் தவெகவிற்கு நிபந்தனையற்ற ஆதரவு தந்து இருக்கிறார்கள்.

அதரவு வழங்கிய காங்கிரஸ்

தவெக பெரும்பான்மை அமைக்க 118 இடங்கள் தேவை என்ற நிலையில் , முதல் ஆதரவாக காங்கிரஸ் 5 இடங்களை வழங்கியது குறிபிபிடத்தக்கது

முதல்வாகிறார் விஜய்

இந்த நிலையில் 118 இடங்களோடு ஆட்சி அமைகிறார் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் தமிழக்தின் முதல்வராகிறார் விஜய் ,ஆளுநரை சந்தித்து பதவியேற்பார் என பெரும் எதிர்பார்ப்பு தமிழக மக்களிடையே நிலவி வருகிறது

புதிய அரசுக்கு ஸ்டாலின் வாழ்த்து

புதிதாக ஆட்சி அமைக்க உள்ள தமிழக் வெற்றி கழக்திற்கு ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார் . ஆட்சி அமைக்க இடங்களை வழங்கிய , சிபிஐ மற்றும் சிபிஎம் , விசிக விற்கு ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்

==============