Thirumavalavan stated that it is true DMK and AIADMK held talks to prevent TVK from coming to power. google
தமிழ்நாடு

”அதிமுக, திமுக கூட்டணி பேச்சு உண்மைதான்” : தவெக வராமல் தடுக்க நடந்த பேரம் : உண்மையை போட்டுடைத்த திருமாவளவன்!

தவெக ஆட்சிக்கு வருவதை தடுக்க திமுக, அதிமுக பேச்சுவார்த்தை நடத்தியது உண்மைதான் என்று, திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

Kannan

ஆட்சி அமைத்த தவெக

தமிழக சட்டமன்ற தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், தவெக 108 இடங்களை கைப்பற்றி தனிப்பெரும் கட்சியானது. ஆனால் ஆட்சி அமைக்க தேவையான 118 இடங்கள் கிடைக்கவில்லை.

திமுக - அதிமுக கூட்டணி?

திமுகவும், அதிமுகவும் இணைந்து ஆட்சி அமைக்க போவதாகவும், முதல்வராக எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வராக உதயநிதி ஸ்டாலின் பொறுப்பு ஏற்க இருப்பதாகவும் பேச்சு அடிபட்டது. ஆனால், உறுதியான தகவல் எதுவும் வெளியாகவில்லை.

தவெகவிற்கு திமுக கூட்டணி கட்சிகள் ஆதரவு

இந்தநிலையில், திமுக கூட்டணியில் அங்கம் வகித்த காங்கிரஸ், முதல் நபராக வெளியேறி தவெகவிற்கு ஆதரவு தந்தது. அடுத்து கம்யூனிஸ்ட், விசிக, ஐயூஎம்ல் ஆதரவு கரம் நீட்ட, முதல்வரானார் விஜய்.

அதிமுக எம்எல்ஏக்கள் ஆதரவு

சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு கோரிய போது அதிமுகவின் அதிருப்தி அணியை சேர்ந்த 25 பேர் தவெகவிற்கு ஆதரவு தந்தனர். இதனால் தவெகவிற்கு 144 பேரின் ஆதரவு கிடைத்தது.

திமுக - அதிமுக கூட்டணி பேச்சு குறித்து சி.வி. சண்முகம் போன்றோரும் தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர்.

திமுக - கூட்டணி பேச்சு உண்மை தான்

இந்தநிலையில், தவெக ஆட்சி அமைப்பதை தடுக்கும் விதமாக திமுக- அதிமுக இணைந்து ஆட்சி அமைக்க பேச்சுவார்த்தை நடத்தியது உண்மை தான் என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

கருத்துக் கேட்ட திமுக

“கூட்டணி கட்சிகள் இணைந்து வலுவான எதிரணியாக செயல்படலாம் என திமுக தலைவர் ஸ்டாலின் கடந்த 5ம் தேதி வலியுறுத்தினார். 7ம் தேதி விசிக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு தனித்தனியாக ஒரு அழைப்பு வந்தது.

ஸ்டாலின் எங்களை பார்க்க விரும்புவதாக ஒரு அழைப்பு வந்தது. தொடர்ந்து நாங்கள் நேரில் சென்றோம். அப்போது திமுக மற்றும் அதிமுக கூட்டணியே இணைந்து ஆட்சி அமைக்கும் முடியும் என ஒரு பரிந்துரை வந்துள்ளது. இதுபற்றிய உங்கள் கருத்து என்னவென கேட்டனர்.

எதிர்ப்பு தெரிவித்தோம்

இது திமுகவிற்கே சூனியமாக மாறிவிடும், எதிர்காலமே கேள்விக்குறியாகலாம் என நான் கூறினேன். கம்யூனிஸ்டுகளும் கிட்டத்தட்ட அதே மாதிரியான கருத்துகளையே முன்வைத்தனர்.

பின்பு நாங்கள் அங்கிருந்து கிளம்பிவிட்டோம். பின்பு எங்களிடையே தொலைபேசி உரையாடல்கள் மட்டுமே இருந்தன” என திருமாவளவன் கூறியுள்ளார்.

ஆனால், அப்படிப்பட்ட நிகழ்வு எதுவும் நடக்கவில்லை என, திமுகவும், அதிமுகவும் மறுத்து வந்தன. இந்தச்சூழலில் திருமா அளித்த பேட்டி மூலம், திரைமறைவு பேச்சுவார்த்தை வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

=====================