திருப்பரங்குன்றம் தீபத்தூண்
Thiruparankundram Deepam Issue : முருகனின் ஆறு புனித தலங்களில் (அறுபடை வீடுகள்) ஒன்றான திருப்பரங்குன்றம், தமிழ் இந்து ஆன்மிக நிலப்பரப்பில் சிறப்பு மிக்க இடத்தை பெற்றுத் திகழ்கிறது. திருப்பரங்குன்றம் தீபத்தூணில் கார்த்திகை தீப விளக்கை ஏற்றுவது, வெறும் வெறும் விளக்கை ஏற்றுவது பற்றியது மட்டுமல்ல. நிலம், தெய்வம், கலாச்சாரம் மற்றும் பக்தியை ஆன்மிக தொடர்ச்சியாக இணைக்கும்புனித நடைமுறையை மீட்டெடுப்பதாகும். நிர்வாக தயக்கம் மற்றும் அரசியல் பயம் காரணமாக தீபத்தூணில் விளக்கேற்றுவது நிறுத்தப்பட்டது.
நீதித்துறை மூலம் முயற்சி
நீதித்துறையின் தீர்ப்பு மூலம், இந்த பாரம்பரியத்தை மீட்டு எடுக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது. நீண்ட காலமாக சீர்குலைந்த புனித வழக்கம் மீட்பு, வழிபாட்டுக்கான அரசியலமைப்பு உரிமையை உறுதிப்படுத்தல், தமிழ் இந்து மரபின் சட்டப் பூர்வத்தன்மை நிலைநாட்டப்பட்டது.
இந்துக்களுக்கு எதிராக அறநிலையத்துறை
நீதிமன்ற உத்தரவால் பதறிய தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறை ( HRCE ), கார்த்திகை தீபம் ஏற்றுவதை நிறுத்துமாறு மேல்முறையீடு செய்தது. இது திமுக அரசின் அப்பட்டமான துரோகம். கந்தமலையை சிக்கந்தர் மலை என்று பெயர் மாற்ற முயன்றபோது, அமைதியாக இருந்த அரசு,பக்தர்கள் மலையை பாதுகாக்க ஒற்றுமையாக எழுந்தபோது, அடக்குமுறையை ஏவியது.
திமுகவின் விரோத மனப்பான்மை
இப்போது, முருகன் வசிப்பதாக கருதப்படும் மலையில் கார்த்திகை தீபம் ஏற்றுவதை நிறுத்தி, இந்துக்களுக்கு எதிரான நிலைப்பாட்டை முழுமையாக வெளிப்படுத்தி இருக்கிறது திமுக. இதற்கு முக்கிய காரணம் இந்துக்கள் மீதான வெறுப்பு தான்.
விளக்கேற்ற நீதிமன்றம் அனுமதி
பக்தர்களுக்கு ஆதரவாக இருக்க வேண்டிய HR&CE அனுமதி மறுத்ததால் பக்தர்கள் நீதிமன்றங்களை அணுகினர். டிசம்பர் 2ம் தேதி உயர் நீதிமன்ற மதுரைக்கிளை நிபந்தனைக்குட்பட்ட அனுமதியை வழங்கியது. அதன்படி, குறைந்த மக்கள், உரிய பாதுகாப்பு, போலீஸ் மேற்பார்வையில் தீபத்தூணில் விளக்கு ஏற்ற அனுமதி வழங்கப்பட்டது.
மதச் சுதந்திரம் நசுக்கப்பட்டது
இதை நிறைவேற்றும் பொறுப்பை வகிக்கும் அரசு, அதை எதிர்த்து மேல்முறையீடு செய்து தடை கேட்டது. இதில் தீபத்தூணில் விளக்கு ஏற்றனால், தெருக்களில் இரத்தம் சிந்தும் என்று HR&CE வாதிட்டது வேடிக்கை தான். மத சுதந்திரத்தை நசுக்குவதில் என்பதில், திமுகவிற்கு மிக நீண்ட வரலாறு இருக்கிறது. இந்துக்களின் மத உரிமைகளைப் பாதுகாக்க உருவாக்கப்பட்ட துறையையே, திமுக இந்துக்களுக்கு எதிராகப் ஒரு கருவியாக பயன்படுத்துவது வேதனையான ஒன்று.
கவலையில்லாத திமுக அரசு
தேவாலயங்கள், மசூதிகளின் நிதிகளில் கை வைக்காமல், கோவில் நிதியை விரும்பும் போது பயன்படுத்துவதில் மட்டும் திமுக அரசுக்கு எப்போதும் கவலையே கிடையாது. கோவில் நிதியை கொள்ளையடித்து, கோயில் நிலங்களை ஆக்கிரமித்து இந்து மத நிறுவனங்களை பலவீனமாக்கியது திமுக.
இந்து எதிர்ப்பில் உறுதி
தீபத்தூண் விவகாரத்தில் வக்ஃப் வாரியமோ அல்லது முஸ்லிம் தரப்போ கூட வாதிடாத ஒன்றை திமுக முன்வைக்கிறது. இந்து கோவில்கள், பக்தர்களின் உரிமைகளை பாதுகாக்க வேண்டிய துறை, அதற்கு அமைச்சராக சேகர் பாபு இருக்கிறார். 2023ல் சனாதனம் அழிக்கப்பட வேண்டிய ஒன்று என்று பொருளில் உதயநிதி ஸ்டாலின் பேசியது, அப்பட்டமான இந்து எதிர்ப்புகளில் ஒன்று.
வாக்கு வங்கி அரசியல்
முஸ்லிம் வாக்கு வங்கிகளை திருப்திப்படுத்தும் முயற்சியில், திமுக, இந்து மரபுகளை மீண்டும் மீண்டும் நசுக்கி வருகிறது. இதை கேள்வி கேட்பவர்கள் குறி வைக்கப்படுகிறார்கள் அல்லது தண்டிக்கப்படுகிறார்கள். இந்துக்களுக்கு எதிராக செயல்படுவது என்பது திமுகவின் தொடர்ச்சியான ஒடுக்குமுறை செயல்பாடு தான்.
குன்றின் மீது ஒளி உதிக்கும்
முருகனின் அருளாலும், தமிழ் பக்தர்களின் அசைக்க முடியாத விருப்பத்தாலும் திமுகவின் முயற்சி தோற்கடிக்கப்படும். குன்றின் மீது மீண்டும் ஒளி உதிக்கும், இது சடங்கிற்கான வெற்றி மட்டுமல்ல, பாரம்பரியத்திற்கான வெற்றியாகும். திருப்பரங்குன்றம் மலை குமரனுக்கு சொந்தமானது. எந்த அரசுன் அதன் ஒளியை அணைக்க முடியாது.
============