Thoothukudi student murder case convict gets double death sentence: POCSO court delivers verdict in 76 days  google
தமிழ்நாடு

தூத்துக்குடி மாணவி கொலை வழக்கு: குற்றவாளிக்கு இரட்டை தூக்கு தண்டனை : போக்சோ நீதிமன்றம் 75 நாட்களில் தீர்ப்பு

விளாத்திகுளம் அருகே பிளஸ்-2 மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்ப்ட்ட வழக்கில் குற்றவாளி என் நிரூப்பிக்கப்பட்டு அதிகபட்ச தண்டனையாக தூக்கு தண்டனை விதித்துள்ளது

Rohini

கொலை வழக்கு பின்னணி

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே பிளஸ்-2 மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்த கொலை தொடர்பாக 10 தனிப்படைகள் அமைத்து போலீஸார் தேடி வந்த நிலையில் 9 நாட்களுக்கு பின்பு

ராமநாதபுரம் மாவட்டம் சாயல் குடியைச் சேர்ந்த முனியசாமி மகன் மாவீரன் என்ற தர்ம முனீஸ்வரனை (37) கைது செய்தனர். அதனைத் தொடர்ந்து, தூத்துக்குடி போக்சோ நீதிமன்றத்தில் அவரை ஆஜர்படுத்தினர்.

குற்றவாளி : நீதிமன்ற காவல்

இந்த வழக்கு தொடர்பாக விசாரணை செய்த நீதிபதி, தர்ம முனீஸ்வரனை ஏப்.2 வரை, நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டார். அதன் பின்னர், பலத்த பாதுகாப்புடன் தர்ம முனீசுவரன் பாளையங் கோட்டை சிறையில் அடைத் தனர்.

அங்கு அவரது எதிரிகள் சிறையில் இருப்பதால் பாது காப்பு கருதி, மதுரை மத்திய சிறைக்கு மாற்ற முடிவெடுத் தனர். அதன்படி பலத்த பாது காப்போடு அழைத்து வந்த விளாத்திகுளம் போலீஸார் மார்ச் 20-ல் நள்ளிரவில் தர்ம முனீஸ்வரனை மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.

நீதிமன்ற காவல்

இந்த வழக்கு தொடர்பாக விசாரணை செய்த நீதிபதி, தர்ம முனீஸ்வரனை ஏப்.2 வரை, நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டார். அதன் பின்னர், பலத்த பாதுகாப்புடன் தர்ம முனீசுவரன் பாளையங் கோட்டை சிறையில் அடைத் தனர்.

குற்றம் நடந்த 75 நாட்களில் தீர்ப்பு

சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் ,குற்றம் நடந்த 76 நாளில் குற்றவாளிக்கு அதிரடியான தீர்ப்பை போக்ஸோ நீதிமன்றம் வழங்கியிருகிறது ,

குற்றவாளிக்கு இரட்டை தூக்கு தண்டனை

விளாத்திகுளம் மாணவி கொலை வழக்கில் குற்றவாளி தர்ம முனீஸ்வரனுக்கு இரட்டை தூக்கு தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி இருக்கிறது.

டிஎன்ஏ சோதனை மூலம், குற்றவாளியை போலீசார் கைது செய்து, போக்சோ வழக்கு பதிவு செய்தனர். தூத்துக்குடி மாவட்ட 2-வது கூடுதல் நீதிமன்ற நீதிபதி பிரீத்தா இந்த வழக்கை விசாரித்தார். 75 நாட்களில் இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டு இருக்கிறது.

அரசு தரப்பு வாதத்தை ஏற்று , தண்டனைஅறிவிப்பு

தர்ம முனீஸ்வரனை குற்றவாளி என உறுதி செய்து தீர்ப்பு வழங்கிய நீதிபதி, உச்சபட்ச தண்டனையாக மரண தண்டனை வழங்க வேண்டும் என அரசு தரப்பு வாதத்தை ஏற்று, இரட்டை தூக்கு தண்டனை விதித்து உத்தரவிட்டார்.

=========================