https://x.com/RKFI
தமிழ்நாடு

'தக் லைஃப்' பட விவகாரம் : கர்நாடகாவை கண்டித்த உச்சநீதிமன்றம்

'தக் லைஃப்' படவிவகாரம் தொடர்பாக கர்நாடக அரசை உச்சநீதிமன்றம் கண்டித்துள்ளது.

MTM

நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் உருவான “தக் லைஃப்” திரைப்படத்துக்கு கர்நாடகாவில் விதிக்கப்பட்ட தடைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதிகள், குண்டர்கள் கலவரம் செய்பவர்கள், நமது வீதிகளை வன்முறையை கையில் எடுத்துக் கொண்டு கைப்பற்றுவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது.

எந்த சமூகமும் சட்டத்தின்படி தான் செயல்பட வேண்டும். இந்த விவகாரத்தில் கர்நாடக அரசுக்கு ஏதாவது தெரிவிக்க வேண்டும் என்றால் நாளைக்குள் தெரிவித்து விடுங்கள். இது போன்ற விஷயங்களை எல்லாம் அப்படியே தொடர விட முடியாது .

சட்டத்திற்கு புறம்பான விஷயங்களை எங்களால் பார்த்துக் கொண்டிருக்க முடியாது. திரைப்படத்தை எடுக்கவும் அதை வெளியிடவும் அனைவருக்கும் உரிமை இருக்கிறது. அந்தத் திரைப்படத்தை பார்ப்பதா வேண்டாமா என்பதை மக்கள் முடிவு செய்வார்கள். அதை விடுத்து வன்முறையை காரணம் காட்டி யார் ஒருவரும் ஒரு திரைப்படத்தை தடை விதிக்க முடியாது.

திரையரங்குகள் எரிக்கப்படும் என்ற பயத்தில் திரைப்படத்தை வெளியிட தடை விதிப்பது என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. அப்படி யாராவது மிரட்டல் விடுகிறார்கள் என்றால் திரைப்படத்தை பாதுகாப்பாக வெளியிடுவதற்கான நடவடிக்கைகளில் இறங்க வேண்டியது மாநில அரசின் கடமை. இது தொடர்பாக கர்நாடக அரசு முடிவு எடுத்திருக்க வேண்டும்.

சென்சார் சான்றிதழ் பெற்ற பின்னர் எந்த ஒரு திரைப்படத்தையும் தடை செய்ய முடியாது, அரசு அதனை உறுதி செய்ய வேண்டும் .

இந்த திரைப்படத்தை திரையிடும் விவகாரம், பாதுகாப்பு விவகாரம் தெரடர்பாக வரும் வியாழக்கிழமைக்குள் கர்நாடக அரசு தனது நிலைப்பாட்டை தெரிவிக்க வேண்டும் .

இவ்வாறு நீதிபதிகள் கூறினர். கர்நாடக தரப்பு வழக்கறிஞரின் குறுக்கீட்டு வாதங்களை நீதிபதிகள் ஏற்கவில்லை.