Tiruppur Special SI Shanmugavel Murder Case 
தமிழ்நாடு

சிறப்பு SI வெட்டிப் படுகொலை : கேள்விக்குறியாகும் சட்டம் ஒழுங்கு

Tiruppur SI Shanmugavel Murder : திருப்பூர் அருகே தகராறை தடுக்க சென்ற காவல்துறை சிறப்பு உதவி ஆய்வாளர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டது, அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.

Kannan

கேள்விக்குறியாகும் சட்டம் ஒழுங்கு :

Tiruppur SI Shanmugavel Murder : தமிழகத்தில் திமுக அரசு நான்கு ஆண்டுகளை நிறைவு செய்துள்ள நிலையில், சட்டம் ஒழுங்கு நிலை நாளுக்கு நாள் மோசமடைந்து வருகிறது. பாலியல் வன்கொடுமைகளை ஒழிந்தபாடில்லை. காவல்நிலைய மரணங்களும் தொடர் கதையாகி விட்டன. காவலர்களுக்கே பாதுகாப்பில்லை என்ற நிலைதான் இப்போது. அப்படியிருக்கையில் பெண்கள், பெண் குழந்தைகளின் பாதுகாப்பு பற்றி கேட்கவே வேண்டாம்.

குடிபோதையில் தந்தை, மகன் தகராறு :

நிலைமை இப்படி மோசமடைந்து இருக்க, திருப்பூர் அருகே சிறப்பு எஸ்ஐ சண்முகவேல் வெட்டிக் கொல்லப்பட்டது, தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை தாலுகா குடிமங்கலம் பகுதியில் மூங்கில் தொழுவு கிராமத்தில் மடத்துக்குளம் எம்எல்ஏ மகேந்திரனுக்கு சொந்தமான தோட்டம் இருக்கிறது. இந்த தோட்டத்தில் மூர்த்தி மற்றும் அவரது மகன் தங்கபாண்டியன் ஆகியோர் பணியாற்றி வந்திருக்கின்றனர். இருவரும் நேற்றிரவு குடிபோதையில் ரகளையில் ஈடுபட்டிருக்கின்றனர்.

தந்தையை தாக்கிய மகன் :

வாக்குவாதம் ஒரு கட்டத்தில் மோதலாக மாற, தந்தை மூர்த்தியை மகன் தங்கபாண்டியன் தாக்கி இருக்கிறார். இதைபார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள், காவல்நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த குடிமங்கலம் காவல் நிலைய எஸ்ஐ சண்முகவேலுக்கு தகவல் அளிக்கப்பட்டது. இதன்பின் எஸ்ஐ சண்முகவேல்(Special SI Shanmugavel) மற்றும் காவலர் அழகுராஜ் இருவரும் சம்பவ இடத்திற்கு சென்றனர்.

சிறப்பு எஸ்ஐ வெட்டிக்கொலை :

அங்கு சண்முகவேல் மட்டும் சென்று இருவரையும் சமாதானம் செய்ய முற்பட்டார். ஒரு கட்டத்தில் காயமடைந்து இருந்த மூர்த்தியை ஆம்புலன்ஸில் ஏற்றி மருத்துவமனைக்கு எஸ்ஐ அனுப்பி வைத்தார். இதனால் ஆத்திரமடைந்த தங்கபாண்டியன், திடீரென எஸ்ஐ சண்முகவேலை(Tiruppur SI Shanmugavel Murder) அரிவாளால் வெட்டினான். அதை தடுக்க முயன்ற காவலர் அழகுராஜையும் வெட்ட தங்கபாண்டியன் துரத்தி இருக்கிறார். ஆனால் அங்கிருந்து தப்பியோடிய அழகுராஜ், காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளார். கூடுதல் காவலர்கள் தோட்டத்திற்கு வருவதற்குள் அரிவாளால் வெட்டால் படுகாயம் அடைந்த எஸ்ஐ சண்முகவேல் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

மேலும் படிக்க : திமுக ஆட்சியில் போலீசுக்கே பாதுகாப்பு இல்லை’ : எடப்பாடி ஆவேசம்

தனிப்படைகள் தேடுதல் வேட்டை :

எஸ்ஐ சண்முகவேலை கொலை செய்து விட்டு தப்பியோடிய தங்கப்பாண்டியனை பிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. படுகொலை செய்யப்பட்ட சண்முகவேல்(Shanmugavel Death) குடும்பத்திற்கு ஒரு கோடி ரூபாய் நிவாரண நிதி வழங்க தமிழக அரசு உத்தரவிட்டு இருக்கிறது. குடிபோதையில் காவல்துறையினரை வெட்டிக் கொல்லும் அளவுக்கு சட்டம் ஒழுங்கு பாதிக்கப்பட்டு இருப்பது, திமுக அரசு மீதான நம்பிக்கையை தகர்த்து உள்ளது.

=====