வேளாண் பட்ஜெட் 2026 :
TN Agriculture Budget 2026 : தமிழக அரசு இடைக்கால பொது பட்ஜெட்டை தாக்கல் செய்தது. நிதியமைச்சர் தங்கம் தென்னரசு பட்ஜெட்டை தாக்கல் செய்தார். தொடர்ந்து, வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.
1. மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டம்” - இதுவரை சுமார் 21 இலட்சத்து 35 ஆயிரம் விவசாயிகள் பயன்
2. ஐந்து ஆண்டுகளில், பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தில் 184 இலட்சம் ஏக்கர் பரப்பு, சுமார் 80 இலட்சம் விவசாயிகளால் காப்பீடு
3. காப்பீட்டுக் கட்டண மானியமாக 6,073 கோடி ரூபாயை தமிழக அரசு வழங்கியது
4. ஐந்து ஆண்டுகளில் மாநிலத்தின் தனித்துவமான விளைபொருட்களுக்கு புவிசார் குறியீடு பெறுவதற்கு நடவடிக்கை
5. இதுவரை 41 விளைபொருட்களுக்கு விண்ணப்பம், 9 விளைபொருட்களுக்கு புவிசார் குறியீடு
6. நெல் சாகுபடி பரப்பையும், உணவு தானிய உற்பத்தியையும் அதிகரிக்க, ஐந்து ஆண்டுகளாக மேட்டூர் அணை குறித்த காலங்களில் திறப்பு
7. குறுவை சிறப்பு தொகுப்பு திட்டமும் ரூ.482 கோடி செலவில் செயல்படுத்தப்பட்டு, 19.51 இலட்சம் விவசாயிகள் பயன் பெற்றனர்
8. 2025-26 ஆம் ஆண்டில் தமிழ்நாடு முழுவதும் குறுவை பருவத்தில் 12.48 இலட்சம் ஏக்கரில் நெல் சாகுபடி
9. கடந்த ஆண்டை விட 3 இலட்சம் ஏக்கர் கூடுதல் சாகுபடி
10. ஐந்து ஆண்டுகளில், மொத்தம் 77,499 வேளாண் இயந்திரங்கள், கருவிகள் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டன.
11. 1,320 வேளாண் இயந்திர வாடகை மையங்கள் நிறுவப்பட்டு, மானியமாக 783 கோடி ரூபாய் வழங்கப்பட்டது.
12. ஐந்து ஆண்டுகளில், இதுவரை சுமார் 2 இலட்சம் புதிய இலவச மின்சார இணைப்புகள் விவசாயிகளுக்கு வழங்கல்
13. 23.86 இலட்சம் விவசாய மின் இணைப்புகளுக்கு இலவச மும்முனை மின்சாரம் வழங்குவதற்கென இதுவரை ரூ.33,904 கோடி நிதி செலவிடப்பட்டுள்ளது
14. தமிழ்நாட்டில் கூடுதலாக 3.48 இலட்சம் ஏக்கர் விவசாய நிலங்களுக்கு பாசன வசதி
15. தக்காளி, வெண்டை, கத்தரி, முருங்கை போன்ற காய்கறிகளின் பரப்பு 1 இலட்சம் ஹெக்டரில் விரிவாக்கம்
16. 1,979 எக்டர் நிரந்தர பந்தல் ஆகியவை மேற்கொள்ள 1.68 இலட்சம் விவசாயிகள் ரூ.259 கோடி மானியம்
17. மா, பலா, வாழை,கொய்யா, பப்பாளி போன்ற பழங்களின் சாகுபடி பரப்பு 36,555 எக்டரில் விரிவாக்கம். இதற்கென, ரூ.72.47 கோடி மானியம் வழங்கப்பட்டு 48,580 விவசாயிகள் பயன்
18. ஐந்து ஆண்டுகளில், 186 இலட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல், ரூ.2,118 கோடி ஊக்கத்தொகை வழங்கப்பட்டது
19. 2020-21 ஆம் ஆண்டினை ஒப்பிடுகையில் ஊக்கத்தொகை சன்ன ரக நெல்லுக்கு 123 சதவீதமும், சாதாரண ரக நெல்லுக்கு 162 சதவீதமும் உயர்த்தி வழங்கப்பட்டுள்ளது.
20. தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 2021-ஆம் ஆண்டில் 74 சதவீதமாக இருந்த இளங்கலை மொத்த மாணவர் சேர்க்கை 2025-ஆம் ஆண்டில் 97 சதவீதமாக உயர்வு.
மேலும் படிக்க : அரசின் நிதிநிலை: 10.71 லட்சம் கோடி கடன், 48,696 கோடி பற்றாக்குறை
==============