TN Assembly Elections 2026: TVK Vijay to Contest from Perambur Constituency ; Nomination Filing on March 30! source : google
தமிழ்நாடு

சட்டமன்ற தேர்தல் 2026 : பெரம்பூரில் விஜய் போட்டி : மார்ச் 30ல் மனுத்தாக்கல்!

TVK Vijay Contest in Perambur Constituency for 2026 Assembly Election : விஜய் மனுதாக்கல் செய்தவுடன் மற்ற தொகுதி வேட்பாளர்களும் தங்களது தொகுதிகளில் மனுத்தாக்கல் செய்ய உள்ளனர்.

S Kavitha

தமிழக சட்டமன்ற தேர்தல் 2026

TVK Vijay Contest in Perambur Constituency for 2026 Assembly Election : தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மார்ச் 30 ஆம் தேதி பெரம்பூரில் வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளதாகவும் தொடர்ந்து அப்பகுதியில் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

நாளை வேட்பாளர்கள் அறிமுக கூட்டம்

நாளை மாமல்லபுரத்தில் தவெக வேட்பாளர்களை அக்கட்சியின் தலைவர் விஜய் அறிமுகம் செய்கிறார். பின்னர் நாளை மறுநாள் பெரம்பூர் தொகுதியில்(TVK Vijay Nomination Date) மதியம் 12 மணிக்கு மனுத்தாக்கல் செய்கிறார்.

தேர்தல் பிரசாரத்தை தொடங்கும் விஜய்

வேட்புமனு தாக்கல் செய்த கையோடு தொடர்ந்து தேர்தல் பிரச்சாரத்தையும் மேற்கொள்ள திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது. விஜய் மனுதாக்கல் செய்தவுடன் மற்ற தொகுதி வேட்பாளர்களும் தங்களது தொகுதிகளில் மனுத்தாக்கல் செய்ய உள்ளனர்.

பெரம்பூரில் விஜய்க்கு சிக்கல் ?

முன்னதாக தவெக தலைவர் விஜய் இன்று பெரம்பூர் எம்.கே.பி நகர் பேருந்து நிறுத்தம் அருகே பிரச்சாரம் செய்ய திட்டமிட்டிருந்தார்.

அனுமதி மறுத்த காவல்துறை ?

ஆனால் தவெகவினர் தேர்வு செய்த இடமானது அசம்பாவிதத்திற்கு வழிவகுக்கும் எனக் கூறி காவல்துறை அனுமதி தர மறுத்துவிட்டதாகவும் அதனால் தவெகவினர் வேறு இடத்தைத் தேர்வு செய்து காவல்துறையினரிடம் அனுமதி பெற வேண்டும் என்று தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது.

சென்னை மாநகராட்சி விளக்கம்

ஆனால் இதற்கு சென்னை பெருநகர மாநகராட்சி தனது சமூக வலைதளப் பக்கத்தில் மறுப்பு தெரிவித்தது.

அந்த பதிவில், சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பெரம்பூர் சட்டமன்ற தொகுதி, முல்லை நகர் பகுதியில் ஒரு அரசியல் கட்சியின் கூட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டதாகவும், மாநகராட்சியால் திடீரென பணிகள் மேற்கொள்ளப்பட்டு அனுமதி வழங்காத சூழல் ஏற்படுத்தப்பட்டதாகவும் சில ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.

புதிய பணிகள் இல்லை

இவ்விடத்தில் பெருநகர சென்னை மாநகராட்சியால் எந்தப் பணிகளும் மேற்கொள்ளப்படவில்லை மற்றும் புதிய பணிகள் எதுவும் ஆரம்பிக்கப்படவும் இல்லை.

சென்னை குடிநீர் வாரியத்தால் குடிநீர் குழாயில் ஏற்பட்ட திடீர் உடைப்பை சரிசெய்ய மிகக் குறுகிய பரப்பளவில் பழுதுபார்க்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, அவையும் உடனடியாக நிறைவு செய்யப்பட்டுள்ளன.

முற்றிலும் தவறான தகவல்

எனவே, அரசியல் கட்சியின் கூட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டதற்கு மேற்கண்ட பணிகள் காரணமாக காட்டப்படுவது முற்றிலும் தவறான தகவலாகும் என்று

தவெக தலைவர் விஜய் சுமத்திய குற்றச்சாட்டு குறித்து சென்னை மாநகராட்சி விளக்கம் அளித்துள்ளது.

======