TN Assembly Elections 2026 Vibrant political constituency sharing, DMK, ADMK to enter the fray directly google
தமிழ்நாடு

DMK vs ADMK : சட்டமன்ற தேர்தல் : விறுவிறுப்பான தொகுதிப் பங்கீடு : நேரடியாக களம் காணும் "திமுக அதிமுக"

DMK vs ADMK Seat Sharing 2026 Assembly Elections : சட்டமன்ற தேர்தல் :: விறுவிறுப்பான அரசியல் தொகுதி பங்கீடு ,நேரடியாக களம் காணும் திமுக அதிமுக

Rohini

2026 சட்டமன்ற தேர்தல்

DMK vs ADMK Seat Sharing 2026 Assembly Elections : வருகிற சட்டமன்ற தேர்தலுக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில் , அனைத்து கட்சிகளும் தொகுதி பங்கீடு ,வேட்பாளர்களின் அறிவிப்பை தீவிரமாக செய்து வருகிறது.

அதன்படி தமிழகத்திற்கு சட்டமன்ற தேர்தல் வருகிற ஏப்ரல் 23 ம் தேதி நடைபெற இருக்கும் நிலையில், வேட்புமனு தாக்கல் 31 ம் தேதியில் இருந்து தொடங்குகிறது

திமுக கூட்டணி கட்சிகள்

அதன்படி வருகிற சட்டமன்ற தேர்தலுக்கான திமுகவின் கூட்டணி கட்சிகளை மற்றும் தொகுதி பங்கீட்டின் விவரங்களை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது .

அதன்படி காங்​கிரஸ் ௨௮தொகுத்திக்ள் , தேமு​திக 10, விசிக 8, சிபிஐ 5, சிபிஎம் 5, மதி​முக 4, முஸ்​லிம் லீக் 2, மமக 2, கொமதேக 2 என திமுக கூட்​ட​ணி​யில் இது​வரை 66 தொகு​தி​கள் கூட்​டணி கட்​சிகளுக்கு ஒதுக்​கப்​பட்​டுள்​ளன.

அதிமுக கூட்டணி கட்சிகள்

2026 சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இருக்கும் பாஜகவிற்கு 27 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், அன்புமணி தலைமையிலான பாமகவுக்கு 18 தொகுதிகளும், அமமுகவுக்கு 11 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளன. மேலும் வேட்பாளர்கள் எந்த தொகுதியில் போட்டியிடுவரக்ள் என்றும் அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது

நேரடியாக களம் காணும் திமுக அதிமுக

கூட்டணி கட்சிகளின் தொகுதிகளை தவிர திமுக மற்றும் அதிமுக நேரடியாக மற்ற தொகுதியில் போட்டியிடுகின்றன. அதன்படி ,குறிப்பாக 75 தொகுதிகளில் உதயசூரியன் சின்னத்தில் களம் காண வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது.

அதேபோல அதிமுகவில் 61 தொகுதிகள் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டிருக்கும் நிலையில் மீதமுள்ள தொகுதிகளில்சுமார் 170 இடங்களில் அதிமுக இரட்டை இலை சின்னத்தில் நேரடியாக போட்டியிட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

இதனால் அதிமுக மற்றும் திமுக நேரடியாக தனித்து போட்டியிடம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.