Tamil Nadu BJP leader Nainar Nagendran meeting people in his political tour, exposing the DMK's failures Image Courtesy : BJP Leader Nainar Nagendran X Page
தமிழ்நாடு

திமுக அரசின் தோல்விகள் : அம்பலப்படுத்தும் நயினார் நாகேந்திரன்

Nainar Nagendran: ’தமிழகம் தலைநிமிர தமிழனின் பயணம்’ என்ற பெயரில் அரசியல் சுற்றுப் பயணத்தை தொடங்கிய தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், மக்களை சந்தித்து திமுகவின் தோல்விகளை அம்பலப்படுத்தி வருகிறார்.

Kannan

பாஜகவின் பிரசார பயணம்

BJP Leader Nainar Nagendran Tour : மதுரை தொடக்க விழாவில் பேசிய கூட்டணி கட்சித் தலைவர்களும் பாஜகவின் பிரசார வியூகத்தை எடுத்துக் கூறினர். நயினார் நாகேந்திரன் அவர்களின் சுற்றுப் பயணம் 2026க்கான கவுண்டவுன் தொடங்கி விட்டதையும், திமுக ஆட்சிக்கு முடிவு கட்டப் போவதையும், தேசிய ஜனநாயக கூட்டணியின் வெற்றியையும் வெளிப்படுத்துவதாக இருக்கிறது.

சட்டமன்ற தேர்தல் - தயாராகும் கட்சிகள்

தமிழக சட்டமன்றத்திற்கு அடுத்த ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதத்தில் தேர்தல் நடைபெற இருக்கிறது. இதற்கான பணிகளை அனைத்து அரசியல் கட்சிகளும் தொடங்கி விட்டன. சுற்றுப் பயணம் என்ற பெயரில் மக்களை சந்திக்கும் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

‘தமிழகம் தலைநிமிர தமிழனின் பயணம்’

அந்த வகையில், தமிழக பாரதிய ஜனதா சார்பில் ‘தமிழகம் தலைநிமிர தமிழனின் பயணம்’ என்ற பெயரில், அந்தக் கட்சியின் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருகிறார்.

திமுக ஆட்சி முடிவுக்குவர 177 நாட்கள் மட்டு இருப்பதாக தெரிவித்த அவர், பாஜகவின் யாத்திரை வெறும் அரசியல் பிரச்சாரம் மட்டுமல்ல, ஊழல், வாரிசுரிமை மற்றும் பிளவுபடுத்தும் அரசியலுக்கு எதிரான மக்கள் பயணம் என்பதையும் விளக்கி வருகிறார்.

திமுக அரசின் தோல்விகள்

கரூரில் கூட்ட நெரிசல் துயரச் சம்பவம், கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சோகம், அதிகரித்து வரும் குற்றங்கள், போதைப்பொருள் விற்பனை ஆகியவை திமுக அரசின் நிர்வாக தோல்விகள் என்பதை வெளிப்படுத்தி, அரசின் செயலற்றதன்மை, ஊழலின் வெளிப்பாட்டையும் மக்களிடம் விளக்கி வருகிறார். பெண்களுக்கு மாதாந்திர உதவி போன்ற நலத்திட்டங்களை தேர்தல் வரை திமுக அரசு தாமதப்படுத்துவது, மக்கள் நலனை ஒதுக்கி விட்டு, தேர்தலுக்கான பொது நிதியை அரசு வீணடிப்பதையும் நயினார் நாகேந்திரன் சுட்டிக் காட்டி வருகிறார்.

வலுப்பெறும் தேசிய ஜனநாயக கூட்டணி

மதுரையில் நடைபெற்ற பாஜக பிரசார பயணத்தில் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர். பி. உதயகுமார், மக்கள் நலனுக்காக பாஜகவின் முந்தைய பிரச்சார முயற்சிகளை நினைவு கூர்ந்தார்,

எல். முருகன் நடத்திய வேல் யாத்திரை, அண்ணாமலையின் என் மண், என் மக்கள் யாத்திரையை சுட்டிக்காட்டிய அவர், அவர்களை பின்பற்றி நயினார் நாகேந்திரன் தமிழக மக்களுடனான பாஜகவின் தொடர்பை மேலும் வலுப்படுத்த புதிய யாத்திரையைத் தொடங்கியதை வரவேற்பதாக கூறினார்.

திமுக அரசு மீது அதிருப்தி

தமாகா தலைவர் ஜி.கே. வாசன், புதிய நீதி கட்சி தலைவர் ஏ.சி. சண்முகம் ஆகியோரும் பாஜகவின் பிரசார இயக்கத்திற்கு தங்கள் ஆதரவை தெரிவித்தனர். மதுரையில் கூடிய பெருங்கூட்டம், திமுக அரசு மீதான மக்களின் அதிருப்தியையும், தேசிய ஜனநாயக கூட்டணிக்கான ஆதரவையும் வெளிப்படுத்தியது.

மேலும் படிக்க : Annamalai: திமுக அரசால் தமிழக மக்களுக்கு கிடைத்தது என்ன?-அண்ணாமலை!

பாஜகவின் எழுச்சிப் பயணம்

மதுரை யாத்திரையின் தொடக்கம் தமிழக பாஜகவிற்குள் ஒரு புது எழுச்சி இருப்பதை வெளிப்படுத்தியது. நயினார் நாகேந்திரனை பொருத்தவரை, இது வெறும் பேரணி கிடையாது, உயரிய நோக்கத்துடன் செயல்படும் எதிர்காலத் திட்டம். தேசிய ஜனநாயக கூட்டணிக்குள் இருக்கும் ஒற்றுமைக்கு சாட்சி. மேலும் திமுகவிற்கு பகிரங்க எச்சரிக்கை, 2026க்கான கவுண்டவுன் தொடங்கி விட்டதையே இது உணர்த்துகிறது. பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் முன்வைக்கும் உண்மைகள், திமுக அரசின் தோல்விகள் அனைத்தும், தேசிய ஜனநாயக கூட்டணியின் வெற்றிக்கு வழி வகுக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

================