TN Chief Electoral Officer Archana Patnaik on Time till 30th to add or remove names from voter list 2026 Election google
தமிழ்நாடு

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க 27ம் தேதி வரை அவகாசம் : அர்ச்சனா பட்நாயக்

Chief Electoral Officer Archana Patnaik : சட்டமன்ற தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில் அதற்கான கட்டுப்பாடுகள், முன்னேற்பாடு நடவடிக்கைள் போன்ற முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டிருக்கிறார்.

Rohini

தேர்தல் கட்டுப்பாடு : அர்ச்சனா பட்நாயக்

TN Chief Electoral Officer Archana Patnaik on Add or Remove Names From Voter List 2026 Date : தமிழகத்திற்கான சட்டமன்ற தேர்தல் தேதியானது அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில் தேர்தல் முன் கட்டுப்பாடுகள் குறித்து தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார்,

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க அவகாசம் நீட்டிப்பு

தமிழகத்தில், சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்த பணி நடந்து முடிந்து , வரைவு வாக்காளர் பட்டியல், 2025 டிச., 19ம் தேதி வெளியிடப்பட்டது. ஆனால் மீண்டும் தமிழ்நாடு தேர்தல் அதிகாரி கூறியிருப்பதாவது

புதிதாக வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம் செய்ய, முகவரி மாற்றம் செய்ய, விண்ணப்பம் அளிக்க ஆகியவற்றிற்கு வருகிற 27ம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்டுவதாக அர்ச்சனா பட்நாயக் அறிவித்துள்ளார்.

தேர்தல் குறித்தான கட்டுப்பாடுகள்

தேர்தக் கட்டுப்பாடுகளை குறித்து அவர் கூறியுள்ளதாவது ,மார்ச் 30 முதல் ஏப்.6 வரை பொதுவிடுமுறை நாட்களைத் தவிர மற்ற நாட்களில் காலை 11 மணி முதல் பகல் 3 மணி வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம் என்றும்

உரிய ஆவணங்கள் இல்லாமல் ரூ.50 ஆயிரத்திற்கு மேல் பணம் எடுத்துச் செல்லக் கூடாது. அப்படி எடுத்துச் செல்லப்படும் பணம் எங்கிருந்து பெறப்பட்டது என்பதற்கான ஆவணம் கட்டாயம் தேவை எட்ன்றும் கூறியுள்ளார்.

பறக்கும் படைக்கு அறிவுறுத்தல்

சோதனைகளின்போது பொதுமக்களை தொந்தரவு செய்யக்கூடாது என்று பறக்கும் படைக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார் . மேலும் மக்கள் தகுந்த ஆவணங்களை வைத்திருந்தால் பணத்தை உடனே திருப்பித்தர உத்தரவு அளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

செல்போன்களுக்கு அனுமதி இல்லை

வாக்களிக்கும் இடத்தில் செல்போன்களுக்கு அனுமதி இல்லை துன்று தெரிவிக்கப்பட்டுள்ளது ,மேலும் செல்போன்களை வாக்குச்சாவடிகளில் பாதுகாப்பாக வைக்க வசதி ஏற்பாடுகள் அமைக்கப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

தமிழகத்தில், தோதலை முன்னிட்டு 2,106 பறக்கும் படைகள் ஈடுபடுத்தப்பட்டிருப்பதகவும் தெரிவித்துள்ளார்

ஆன்லைன் பரப்புரைகளுக்கு அனுமதி பெற வேண்டும்

காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை மட்டுமே பரப்புரை செயல்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் ஆன்லைன் மூலம் செய்யப்படும் பரப்புரைகளுக்கு அனுமதி கேட்கப்பட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.