Sai Pallavi And SJ Suryah in Kalaimamani Award Winners 2025 List 
தமிழ்நாடு

அகில இந்திய விருதுகள் : பட்டியலில் முக்கிய திரைப்பிரபலங்கள்..!

SJ Suryah in Kalaimamani Award Winners 2025 List : கலைமாமணி மற்றும் அகில இந்திய விருதுகள் அறிவிப்பு. சிறந்த கலை நிறுவனத்திற்கு கேடயமும், சிறந்த நாடகக்குழுவிற்கு சுழற்கேடயமும் வழங்கப்பட உள்ளது.

Baala Murugan

கலை நிறுவனத்திற்கு கேடயம்:

SJ Suryah in Kalaimamani Award Winners 2025 List : பாலசரசுவதி ஆகியோர் பெயரில் வழங்கப்படும் அகில இந்திய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை, கலைவாணர் அரங்கத்தில் நடைபெற இருக்கும் இந்த விழாவில் விருதாளர்களுக்கு விருதுகள் வழங்கி சிறப்பிக்கப்பட உள்ளது. மேலும், சிறந்த கலை நிறுவனத்திற்கு கேடயமும், சிறந்த நாடகக்குழுவிற்கு சுழற்கேடயமும் வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கலைமாமணி விருதுகள் :

கலைமாமணி விருது வழங்கக்கோரி வரப்பெற்ற விண்ணப்பங்கள் தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தால் இயல், இசை, நாட்டியம், நாடகம், திரைப்படம், சின்னத்திரை, இசை நாடகம், கிராமியக் கலைகள் மற்றும் இதர கலைப் பிரிவுகள் என கலைப் பிரிவு வாரியாக பிரிக்கப்பட்டு, தகுதியுள்ள கலைஞர்களின் பெயர்ப் பட்டியல் தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் பொதுக்குழு கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டு, இயற்றப்பட்ட தீர்மானம் மற்றும் பரிந்துரையை ஏற்று 2021, 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளுக்கான கலைமாமணி விருதுகள் பெறும் விருதாளர்களின் பெயர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது.

3 சவரன் தங்கத்துடன் விருது பட்டயம் :

இந்த கலைமாமணி விருது பெறும் கலைஞர்களுக்கு 3 சவரன் எடையுள்ள தங்கப் பதக்கம் மற்றும் விருது பட்டயம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பாரதியார். எம்.எஸ்.சுப்புலட்சுமி மற்றும் பாலசரசுவதி ஆகியோர் பெயரில் வழங்கப்படும் கலை வித்தகர்களுக்கான அகில இந்திய விருதுகள் சிறப்பு விருது கலை வித்தகர்களுக்கு எம்.எஸ். சுப்புலட்சுமி விருது (இசை) பத்மபூஷன் டாக்டர் கே.ஜே. யேசுதாஸ் பாலசரசுவதி விருது (நாட்டியம்) பத்மஸ்ரீ முத்துகண்ணம்மாள் உள்ளிட்ட பலருக்கு விருதுகள் வழங்கப்பட உள்ளது.

மேலும் படிக்க : மோகன்லாலுக்கு ‘தாதா சாகேப் விருது' : இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்

திரைப்பிரபலங்களுக்கு விருது

மேலும், இந்திய விருது பெறும் கலை வித்தர்களுக்கு ஒரு இலட்சம் ரூபாய் பரிசுத் தொகைக்கான காசோலையுடன், 3 சவரன் எடையுள்ள தங்கப் பதக்கம் வழங்கப்பட உள்ளது. 2021, 2022 மற்றும் 2023 ஆண்டுக்கான அகில இந்திய விருதுகள் பெரும் பட்டியலில் எழுத்தாளர்கள், நாடக வித்துவான்கள், நாட்டிய கலைஞர்கள் உள்ளிட்டவர்களுடன் திரைப்பட நடிகர்களான மணிகண்டன், எஸ். ஜே. சூர்யா, சாய் பல்லவி, உள்ளிட்டவர்களுக்கும் விருது வழங்கி கௌரவிக்க உள்ளதால் அவர்களின் திரை ரசிகர்கள் மற்றும் திரைப்பிரியர்கள் அவர்களுக்கு சமூக வலைதளங்களிலும் நேரிலும் சென்று வாழ்த்து தெரிவித்து கொண்டாடி வருகின்றனர்.

குவியும் நெட்டிசன்கள் கேள்வி :

மேலும் குறிப்பிட்ட 3 ஆண்டுகளுக்கு மற்றும் விருதுகள் வழங்குவதற்கான காரணம் என்னவென்று நெட்டிசன்கள் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.