TN Government issued guidelines for safe conduct of Pongal Jallikattu 2026 competitions in Tamil Nadu Google
தமிழ்நாடு

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டி : வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!

TN Govt Released Jallikattu Guidelines Rules 2026 in Tamil : பொங்கல் திருநாளை ஒட்டி, தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகளை பாதுகாப்பாக நடத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை அரசு வெளியிட்டுள்ளது.

Kannan

ஜல்லிக்கட்டு போட்டிகள்

TN Govt Released Jallikattu Guidelines Rules 2026 in Tamil : தமிழர்களின் வீர விளையாட்டு ஜல்லிக்கட்டு. மஞ்சு விரட்டு, ஏறு தழுவுதல் மூலமும் இளைஞர்கள் தங்கள் வீரத்தை வெளிப்படுத்துவர். தை திங்களாம் பொங்கலுக்கு இன்னும் சில வாரங்களே உள்ள ஜல்லிக்கட்டு காளைகள் களம் காண தயாராகி வருகின்றன. காளைகளை அடக்க இளைஞர்களும் ஆர்வமுடன் காத்திருக்கிறார்கள்.

அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம்

தமிழர் திருவிழாவை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டிகள் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகின்றன. மதுரை மாவட்டத்தில் நடைபெறும் அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் ஜல்லிக்கட்டுகள் உலகப் புகழ்பெற்றவை.

வழிகாட்டு முறைகள் வெளியீடு

இவை மட்டுமின்றி மஞ்சு விரட்டு, மாடு பிடித்தல் போட்டிகளும் கிராமங்களில் நடத்தப்படும். இந்தநிலையில், கால்நடை பராமரிப்புத் துறை சார்பில் மாவட்ட ஆட்சியர்களுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதில் ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்துவதற்கான வழிகாட்டு முறைகள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

அவற்றின் விவரம் :

* மாவட்ட ஆட்சியர்களிடம் முன்கூட்டியே அனுமதி பெறாமல் ஜல்லிக்கட்டு உள்பட எந்த போட்டிகளையும் நடத்தக் கூடாது.

* விலங்கு வதை தடுப்புச் சட்ட விதிகளுக்கு இணங்க போட்டிகளை நடத்த அனுமதி வழங்க வேண்டும்.

* முன்கூட்டியே அறிவிப்பு வெளியிடாமல் எந்த போட்டியும் நடத்த ஒப்புதல் அளிக்கக் கூடாது.

* விலங்கு வதை தடுப்பு சட்டத்தின் விதிகளில் குறிப்பிட்டுள்ளபடி காளைகள் மற்றும் கால்நடைகளுக்கு தீங்கு ஏற்படாத வகையில் ஜல்லிக்கட்டு நடைபெற வேண்டும்.

* காளைகள் துன்புறுத்தப்படாமல் இருப்பதையும், பாதுகாப்பாக இருப்பதையும் உறுதி செய்வது அவசியம்.

* ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்துவதற்காக அதில் தொடர்புடைய துறைகள் அனைத்திலும் அதிகாரப்பூர்வ குழுக்கள் முன்கூட்டியே அமைக்கப்பட்டிருக்க வேண்டும்.

* இந்த போட்டிகளில் தொடர்புடைய அனைத்து தரப்பினருக்கும் விழிப்புணர்வையும், புரிதலையும் ஏற்படுத்துவது முக்கியம்.

* போட்டி நடைபெறுவதற்கு முன்னதாகவே அனைத்து ஏற்பாடுகளையும் முழுமையாக செய்திருக்க வேண்டும்.

* ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதற்கான விண்ணப்பங்கள் அனைத்தும் இணையவழியில் மட்டுமே அனுப்ப வேண்டும்.

* விண்ணப்பிக்கும்போதே காப்பீட்டு ஆவணங்களை சமர்ப்பிக்க அறிவுறுத்துவது அவசியம்.

* ஜல்லிக்கட்டுக்கு தொடர்பு இல்லாத இடங்களில் அத்தகைய போட்டிகள் நடத்தக் கோரி சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட மாட்டாது.

* தேவையற்ற குழப்பங்கள், தவறுகளைத் தவிர்க்கவும், ஒழுங்குமுறையுடன் போட்டிகளை நடத்தவும், விதிகளை சரிபார்க்கும் பட்டியலின்படி (செக் லிஸ்ட்) செயல்படுதல் வேண்டும்.

* போட்டி களத்திலிருந்து காளைகள் வெளியேறும் இடத்தில் கால்நடை மருத்துவக் குழுக்கள் தயார் நிலையில் இருத்தல் அவசியம்.

* தேவைப்படும் காளைகளுக்கு உடனடியாக மருத்துவ சிகிச்சைகளை அவர்கள் வழங்க வேண்டும்.

* போட்டி களத்துக்குள் பார்வையாளர்களும், வெளி நபர்களும், வீரர்கள் அல்லாத பிறரும் இருக்க அனுமதியில்லை. அதனை உறுதி செய்ய வேண்டிய பொறுப்பு காவல் துறைக்கு உள்ளது.

இவ்வாறு வழிகாட்டு முறைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

======================