TN govt announced collection of outstanding crop loans in cooperative societies completely suspended  source:thamizhalai,ai generated
தமிழ்நாடு

கூட்டுறவு சங்கங்களில் பயிர்க்கடன் வசூல் நிறுத்தம் : விவசாயிகள் புகார் அளிக்க வாட்ஸ்அப் எண் : தமிழக அரசு நடவடிக்கை.!

கூட்டுறவு சங்ககளில் நிலுவையில் உள்ள பயிர்க்கடன்களை வசூலிப்பது முற்றிலும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக. தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Kannan

பயிர்க்கடன் வசூல் நிறுத்தம் - தமிழக அரசு

தமிழகத்தில் உள்ள கூட்டுறவு சங்ககளில் நிலுவையில் உள்ள பயிர்க்கடன்களை வசூலிப்பது முற்றிலும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்திருந்தது.

ஆனால் விவசாயிகள் சிலர் பயிர்க்கடன் வசூலிப்பதாக புகார் தெரிவித்த நிலையில், தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது.

தமிழக அரசு ஆணை

கூட்டுறவு சங்கங்களில் விவசாயிகள் பெற்று நிலுவையிலுள்ள பயிர்க் கடன்கள் வசூலிக்கப்படுவது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இதற்கான அறிவிப்பு கூட்டுறவு சங்கங்களின் பதிவாளரால் மண்டல இணைப்பதிவாளர்கள் மற்றும் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளின் மேலாண்மை இயக்குனர்களுக்கு சுற்றறிக்கை வாயிலாக அனுப்பப்பட்டு, அனைத்து கூட்டுறவு சங்கங்களுக்கும் தவறாது கடைப்பிடிக்க ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டு, கண்காணிக்கப்பட்டு வருகிறது.

விவசாயிகள் புகார் - உடனடி நடவடிக்கை

சில விவசாயிகளிடருந்து தொலைபேசி வாயிலாக நிலுவையிலுள்ள தங்களது பயிர்க் கடன்களை வசூலிக்க முயற்சிப்பதாக புகார்கள் வந்த வண்ணம் உள்ளன.

எனவே, அனைத்து விவசாயிகளின் கவனத்திற்கு தெரிவித்துக் கொள்வதுயாதனில், கூட்டுறவு சங்கங்களில் விவசாயிகள் பெற்ற நிலுவையிலுள்ள பயிர்க்கடனை வசூலிப்பது முற்றிலும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

புகார் எண் அறிவிப்பு

மேலும், நிலுவையிலுள்ள பயிர்க் கடன் வசூலிப்பது தொடர்பாக கூட்டுறவு சங்கத்திலிருந்து எவரேனும் விவசாயிகளை தொடர்புகொண்டால், தொடர்பு கொண்ட கைபேசி எண்...

கூட்டுறவு சங்கத்தின் விவரங்களை கூட்டுறவுத் துறையின் அதிகாரபூர்வ குறைதீர்வு எண்ணான (Official Grievance Redressal Number) 98840 00845 (WhatsApp) எண்ணில் புகார் அளிக்கலாம் என தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.

சர்ச்சையான பயிர்க்கட தள்ளுபடி

சட்டமன்ற தேர்தலின் போது தவெக தனது வாக்குறுதிகளில் முழுமையாக விவசாயிகளின் கடன் தள்ளுபடி செய்யப்படும் என அறிவித்திருந்தது.

ஆனால் கடந்த ஜூன் மாதம் முதலமைச்சர் விஜய் பயிர்க்கடன் தள்ளுபடி தொடர்பான அறிவிப்பை வெளியிட்டார். அதில், கூட்டுறவு வங்கிகளில் 50,000 ரூபாய் வரை பயிர்க்கடன் பெற்ற விவசாயிகளுக்கு முழுமையாக கடன் தள்ளுபடி செய்யப்படும் எனவும் சிறு விவசாயிகளுக்கு 50 % வரை தள்ளுபடி செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

50 ,000 ரூபாய் வரை மட்டும் தான் தள்ளுபடி செய்யப்படும் என தவெக அரசு அறிவித்ததற்கு போராட்டங்கள் வெடித்தது. விவசாயிகள் தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தி பல இடங்களில் போராட்டம் நடத்தினர்.

உயர்த்தப்பட்ட கடன் தள்ளுபடி வரம்பு

அதனைத் தொடர்ந்து சட்டமன்ற நிகழ்வின் போது, தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் விதி 110-ன் கீழ், விவசாயிகளின் நலனைக் காக்கும் வகையில் கூட்டுறவு வங்கிகள் மூலம் வழங்கப்பட்ட பயிர் கடன்களுக்குக் கூடுதல் தள்ளுபடி வழங்கினார் முதல்வர் விஜய்.

பயிர் கடன் தள்ளுபடி விவரம்

ரூ. 75,000 வரை பெற்றுள்ள பயிர் கடன்கள் 100 சதவீதம் முழுமையாக தள்ளுபடி

ரூ. 75,000 முதல் ரூ. 1 லட்சம் வரை பெற்றுள்ள பயிர் கடன்களுக்கு அதிகபட்சமாக 75,000 ரூபாய் வரை தள்ளுபடி

இதன் மூலம் 2,38,264 விவசாயிகள் பயனடைவதுடன், ஏற்கனவே பெற்ற தள்ளுபடியை விட கூடுதலாக 40,000 ரூபாய் வரை பெறும் வாய்ப்பு ஏற்படும்.

ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் பெற்றுள்ள பயிர் கடன்களுக்கு அதிகபட்சமாக 35,000 ரூபாய் வரை தள்ளுபடி வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

===============================.