TN govt appointed film producer Venkata Narayana as its Special Representative in Delhi google
தமிழ்நாடு

”தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி” : சினிமா தயாரிப்பாளர் வெங்கட நாராயணா நியமனம்! : ஓராண்டு ஆண்டு பொறுப்பு...

தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக திரைப்பட தயாரிப்பாளர் வெங்கட நாராயணாவை தமிழக அரசு நியமித்துள்ளது.

Kannan

டெல்லி சிறப்பு பிரதிநிதி

மாநில அரசுகளின் பிரதிநிதியாக டெல்லி செயல்படும் வகையில் நியமிக்கப்படுபவர் தான் சிறப்பு பிரதிநிதி.

மாநில - மத்திய அரசுகளிடையே முக்கிய நிகழ்வுகளில் பாலமாக செயல்படும் வகையில் இவரது பணியானது

அமைச்சர் அந்தஸ்தில் பதவி

இவர் மாநில அமைச்சரின் அந்தஸ்தில் இருப்பார். மேலும், மத்திய அமைச்சகங்கள், நிதி ஆயோக் மற்றும் அரசின் பல்வேறு துறைகள் சார்பில் மாநிலத்தில் செயல்படுத்தப்படும் திட்டங்களுக்கு ஒப்புதல், நிதி ஆகியவற்றை பெற்றுத்தரும் பணியில் ஈடுபடுவார்.

திமுக ஆட்சியில் ஏகேஎஸ். விஜயன்

முந்தைய திமுக ஆட்சியில் ஏ.கே.எஸ்.விஜயன் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக இருந்தார். தமிழகத்தில் விஜய் தலைமையில் புதிய அரசு பொறுப்பேற்ற நிலையில், டெல்லி சிறப்பு பிரதிநிதியாக யாரை நியமிக்கப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு நிலவியது.

சினிமா தயாரிப்பாளர் வெங்கட்ரமணா

இந்நிலையில், முதல்வர் விஜய் நடித்த ‘ஜனநாயகன்’ படத்தின் தயாரிப்பாளரான கர்நாடகாவைச் சேர்ந்த கே.வெங்கடரமணாவை தற்காலிகமாக டெல்லி சிறப்பு பிரதிநிதியாக நியமிப்பதாக தமிழக அரசு நியமித்துள்ளது.

ஓராண்டு பதவி வகிப்பார்

தலைமைச்செயலர் மு.சாய் குமார் இதுகுறித்து வெளியிட்ட அறிவிப்பில், ‘‘தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி பதவி தற்காலிகமாக உருவாக்கப்பட்டு, கே.வெங்கட ரமணா நியமிக்கப்படுகிறார்.

இவர் பதவியேற்கும் நாளில் இருந்து ஓராண்டுக்கு இப்பதவியில் இருப்பார்’’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதல்வர் விஜயின் நண்பர்

முதல்வர் விஜய்யின் நெருங்கிய நண்பரான வெங்கட ரமணா, முதல்வர் விஜய், பதவியேற்புக்கு முன்னதாக ஆளுநர் ஆர்.வி.அர்லேகரை சந்தித்த நிகழ்வுகளில் உடன் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

====