கள் விற்பனைக்கு அரசுத் தடை :
Panang Kallu Sales in Coimbatore : தமிழகத்தில் கள் இறக்கவும், விற்பனை செய்யவும் தடை உள்ளது. அதை மீறி கள்ளு இறக்கி விற்பவர்கள் மீது காவல் துறையில் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அதேசமயம், மதுபான விற்பனையை நிறுத்தி விட்டு, கள் இறக்கி விற்பனை செய்ய அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கையும் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது. அதற்கு பல அரசியல் கட்சிகளும் ஆதரவு தெரிவித்து வருகின்றன. ஆனால் கள் இறக்கி விற்பதற்கான தடை நீடிக்கிறது.
தோப்புகளில் இருந்து கள் இறக்கம் :
இந்தநிலையில், கோவையை அடுத்த பேரூர் அருகே காளாம்பாளையத்தில் இருந்து நொய்யல் ஆற்றுக்குச் செல்லும் வழியில் உயர்மட்ட பாலம் உள்ளது. இந்தப் பகுதியில் ஏராளமான பாக்கு, தென்னை, வாழை மரங்கள் உள்ளன. இங்கு உள்ள ஒரு சில தென்னந் தோப்புகளில் காலை மற்றும் பிற்பகல் நேரங்களில் கள்(Palm Wine) இறக்கப்படுகிறது.
கள் பிரியர்கள் படையெடுப்பு :
அதை வாங்கி குடிக்க கள் பிரியர்கள் தென்னந் தோப்புகளை நோக்கி படையெடுத்து வருகின்றனர். இதன் காரணமாக பேரூர் பகுதியில் தடையை மீறி கள் விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது. குறிப்பாக வார நாட்களை விட ஞாயிற்றுக்கிழமைகள் கள் விற்பனை(Palm Wine Sales) விறுவிறுப்பாக நடக்கிறது. இதனால் அந்தப் பகுதியில் கள் வாங்க வருபவர்களின் கூட்டம் அலைமோதுகிறது.
பாக்கெட்டுகளில் கள் விற்பனை :
கள் குடிக்க வருபவர்கள் காத்திருப்பதை தடுக்கும் வகையில், ஏற்கனவே, மரங்களில் இருந்து இறக்கப்பட்ட கள்ளை(Panang Kallu), பாக்கெட்டுகளில் அடைத்து உடனுக்குடன் விற்பனை செய்கின்றனர். தோட்டங்களில் கள் அமர்ந்து குடிக்க இட வசதியும் ஏற்படுத்தி தரப்பட்டு இருக்கிறது. எனவே, கள் பிரியர்கள் ஆர்வமுடன் இங்கு வந்து குடித்து விட்டு செல்கின்றனர்.
ஒரு லிட்டர் 120 ரூபாய் :
பிளாஸ்டிக் கப்புகளில் ஒரு லிட்டர் கள்(Panang Kallu Litre Price) ₹120 க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தோட்டத்து மரத்தில் இருந்து இறக்கி நேரடியாக விற்பனை செய்வதால் கள் பிரியர்கள் ஆர்வமுடன் இப்பகுதியை முற்றுகையிடுகின்றனர்.
விற்பனை அமோகம், என்ன செய்கிறது அரசு? :
தமிழக அரசு தடை விதித்து உள்ள நிலையில் பேரூர் பகுதியில் எந்த பயமும் இன்றி கள் விற்பனை(Kallu) அமோகமாக நடைபெற்று வருவது, பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. காவல் துறையினர் முறையாக ரோந்து செல்கிறார்களா? அல்லது அவர்கள் ஆதரவுடன் கல் விற்பனை நடைபெறுகிறதா ? என்று சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். கள் விற்பனை(Panang Kallu) தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளன.
=====